பிந்திய செய்திகள்

மண்ணெண்ணை விநியோகத்திற்கும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

இலங்கையில் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் பெற்றோல் விநியோகத்தில் மட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

உடன் அமுலாகும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts