Home சினிமா கையில் குழந்தையுடன் பிக்பாஸ் கவின்..வெளியான பர்ஸ்ட் லுக்

கையில் குழந்தையுடன் பிக்பாஸ் கவின்..வெளியான பர்ஸ்ட் லுக்

0
கையில் குழந்தையுடன் பிக்பாஸ் கவின்..வெளியான  பர்ஸ்ட் லுக்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் புதிய படத்தில் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸுடன் இணைந்து கவின் நடித்துவருகிறார்.

டாடா

இப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். நவீனகால பின்னணியில், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான காதல் கதையாக உருவாகிறது. ’டாடா’ எனும் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கவின் வெளியிட்டுள்ளார். அதில், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் வாசகத்துடன் கையில் குழந்தையுடன் கவின் இருக்கும் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here