Home Blog Page 228

நீங்கள் சைவ உணவு மட்டும் உண்டால் என்னவாகும் ? கண்டிப்பாக இது உங்களுக்கு

மருத்துவ செய்திகள்:நீங்கள் சைவ உணவை மட்டும் உண்பவர்களாக இருந்தால் நீங்கள் உண்ணும் உணவில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக போதியளவு புரோட்டின் உணவுகளை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆனால் பலரும் அதில் தவறான தேர்வுகளை செய்கின்றனர்.

நீங்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தால் உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் சில:

  1. பயறு.
    பயறில் 3 அவித்த முட்டையை விட அதிகளவான புரோட்டின் காணபப்டுகின்றது. அத்துடன் வாரத்தில் 4 தடவைகள் இதனை சாப்பிடுவதனால் உடல் எடையைக் குறைக்க முடியும்.
    100கிராம் பயறில் 9கிராம் புரோட்டின் உள்ளது.
  2. பட்டாணி.
    இதில் கீரையை விட எட்டு மடங்கு புரோட்டின் காணப்படுவதுடன், விட்டமின் –சியும் காணப்படுவதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும், ஆரோக்கியமும் அதிகரிக்கச் செய்யும்.
    100கிராம் பட்டாணியில் 6.3கிராம் புரோட்டின் உள்ளது.
  3. ஆட்டா
    இதில் குளுட்டன் இருப்பதில்லை. அதிகளவான புரோட்டினும் மக்னீசியமும் இதில் காணப்படுகின்றது.

100கிராம் ஆட்டாவில் 9.6கிராம் புரோட்டின் உள்ளது.

  1. கொத்துக் கடலை.
    கொத்துக்கடலை சாப்பிடுவதனால் உடல் எடையைப் பேணுவதுடன், இதில் காணப்படும் புரோட்டினால் தசைகள் உருவாவதுடன், மெட்டபோலிசத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
    100கிராம் கொத்துக்கடலையில் 19 கிராம் புரோட்டின் உள்ளது.
  2. பசலைக் கீரை.
    ஒரு கப் பசலைக் கீரையில் ஒரு அவித்த முட்டையை விட அதிகமான புரோட்டின் காணப்படுகின்றது. இதனை அவித்து சாப்பிடுவது தான் சிறந்தது. பச்சையாக சாப்பிட்டால் வயிறு ஊதச் செய்வதுடன், குடலில் கல்சியம் உறிஞ்சப்படுவதை தவிர்க்கின்றது.
    100கிராம் பசலைக் கீரையில் 5.6கிராம் புரோட்டின் உள்ளது.
  3. சோயா பீன்ஸ்.
    சோயா புரோட்டின் நிறைந்த ஆரோக்கியமான உணவு. இது இறைச்சியை போன்று காணப்படுவதனால் பலரும் விரும்பி உண்பர்.
    100கிராம் சோயாவில் 36கிராம் புரோட்டின் உள்ளது.
  4. கொய்யா.
    கோவாவில் விட்டமிந்சி மட்டுமல்லாது புரோட்டினும் நார்ச்சத்துக்களும் அதிகளவில் உள்ளது. இதனால் சைவ உணவு உண்பவர்களிற்கு மிகவும் சிறந்தது.
    100கிராம் கொய்யாவில் 2.6 கிராம் புரோட்டின் உள்ளது.
  5. அமரந்
    அமரந் எனப்படும் ராஜ்கிரா தாணிய வகை, தொண்மை தொட்டு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. இது முழுமையாக குளுட்டனால் உருவானதால் புரோட்டின் அதிகமாக உள்ளது. அத்துடன் அமினோஅமிலங்கள், கல்சியம், இரும்பு போன்ற கனியுப்புக்களும் உள்ளது.
    100கிராம் அமரந்தில் 4 கிராம் புரோட்டின் உள்ளது.
  6. சீயா விதை.
    சீயா விதை சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கான மிகவும் சிறந்த தாணியம். இதில் புரோட்டினுடன் உடலிற்குத் தேவையான 9 அமினோ அமிலங்கள் காணப்படும். அத்துடன் இதில் காணப்படும் நார்ப் பொருள் மற்றும் கொழுப்புச் சத்தினால் நீண்ட நேரத்திற்கு பசியை ஏற்படுத்தாது. தினமும் நீங்கள் சாப்பிடும் மென்பானங்களில் அல்லது சீரியலில் 1 தேக்கரண்டி சீயா விதைகளைச் சேர்ப்பது முக்கியமானது.

சீயா விதைகள் நீரினை உறிஞ்சி எடுப்பதனால் அதிகளவு நீர் உட்கொள்வது அவசியமானது. இல்லையெனில் உடல் வறட்சி ஏற்படும்.
100கிராம் சீயா விதையில் 4 கிராம் புரோட்டின் உள்ளது.

  1. திணை.
    திணை மிகவும் சிறந்த தாணிய உணவு. இதனை உட்கொள்வதனால் உடலிற்குத் தேவையான சக்தியும், வலிமையும் கிடைக்கும். இதில் அதிகளவான புரோட்டின், இதயத்திற்குத் தேவையான கொழுப்பு, மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இதில் காணப்படும் எல்-ஆர்ஜினைன் எனும் அமினோ அமிலம் தசைகளின் உருவாக்கத்திற்கு உதவுவதுடன் மெட்டமோலிசத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது.
100 கிராம் திணையில் 13 கிராம் புரோட்டின் உள்ளது.

  1. வேர்க்கடலை வெண்ணெய்.
    வேர்க்கடலை வெண்ணெய்யை அதிகளவில் சாப்பிட்டால் வயிற்றுப் பகுதியின் அளவு அதிகரித்து விடும். இதனால் தினமும் 2 மேசைக்கரண்டி மட்டும் போதுமானது.
    2 மேசைக்கரண்டி வேர்க்கடலை வெண்ணெய்யில் 7கிராம் புரோட்டின் உள்ளது.

தலையில் பூ வைக்க பிடிக்குமா? இது தெரிஞ்சுகொண்டு இனி வையுங்கள்!

பெண்கள் என்றாலே தலை நிறைய பூ வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். தலையில் பூ வைத்துக் கொள்ளும் பொழுது ஒருவித நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதை உணரலாம். பெண்ணின் அழகு முதலில், கூந்தல் அலங்காரத்தில் தான் ஒளிந்து கொண்டுள்ளது. முந்தைய காலங்களில் எல்லாம் தலை நிறைய எண்ணெய் தடவி இறுக்கமாக பின்னிக் கொள்வார்கள்.

ஆனால் இன்றோ 90% பேர் வயது வித்தியாசம் கூட இல்லாமல் தலையை விரித்த கோலமாய் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றனர். இதில் பூவை எங்கே வைப்பது? தலையில் பூ வைத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? எந்த பூ எந்த பலனை கொடுக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

காலம் மறந்த சில விஷயங்களில் பூ வைக்கும் பழக்கமும் ஒன்றாக இருந்து வருகிறது. பெண்ணிற்கு அழகு என்பது தலையில் சூடிக்கொள்ளும் பூவிலும் இடம்பெற்றுள்ளது. பூச்சூடிய கூந்தல் தனி அழகு பெறுகிறது. தலையை பின்னி கொள்ளாமல், பூவை வைக்கவும் பலர் விரும்புவதில்லை. இன்று பெரும்பாலான பெண்கள் தலையை பின்னி கொள்ளாமல் ஃப்ரீ ஹேர் எனப்படும் கூந்தலை விரித்து கொள்வதில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர்.

நம் முன்னோர்கள் 6 மணிக்கு மேல் தலை வாரக்கூடாது என்று கூறுவார்கள். வீட்டில் இவ்வாறு பொழுது சாய்ந்த பின் தலையை வாரிக் கொண்டு இருந்தால் திட்டி விடுவார்கள். ஆனால் இன்றோ 24 மணி நேரமும் தலையில் தான் பெண்களுக்கு கை அடிக்கடி சென்று வருகிறது. கூந்தலை சரி செய்வதில் செலவழிக்கும் நேரத்தில், வேறு பயனுள்ள வேலையைக் கூட செய்துவிட முடியும். அந்த அளவிற்கு அதிக நேரத்தை விரயமாக்கும் இந்த ஃப்ரீ ஹேர் தேவையா? என்பதை பெண்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். ஃப்ரீ ஹேர் விடுவதில் கூந்தலும் ஆரோக்கியத்தை, அதன் வலிமையை மிக சீக்கிரமாகவே இழந்து விடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலையை நன்கு பின்னிக் கொண்டு அதில் உங்களுக்கு விருப்பமான பூக்களை வைத்துக் கொள்வதன் மூலம் நோய்களும் நீங்கும் என்கிறது ஆன்மீகம். தலையில் தினமும் ரோஜாப் பூ வைத்துக் கொண்டால் அடிக்கடி தலைசுற்றல் வராமல் பாதுகாக்கலாம். ரோஜா பூவில் இருக்கும் வாசம் தலை பாரத்தை குறைத்து தலைசுற்றலை நீக்குகிறது. மேலும் கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணமாக்கும்.

தலை நிறைய மல்லிப்பூ வைத்துக் கொண்டிருந்தால் பெண்களுக்கு மன அமைதி கிடைக்கும். ஒரு சில பெண்களுக்கு மல்லிகை பூ வைத்தால் தலை சுற்றும் என்று கூறுவார்கள். அதன் அதிகப்படியான வாசம் பல பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளையும் உண்டு பண்ணுகின்றன. ஆனால் தலை நிறைய மல்லிப் பூ வைத்துக் கொள்பவர்களுக்கு மன உளைச்சலில் இருந்து விடுதலை கிடைக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து கண் நோய்களை நீக்குகிறது.

மேலும் செண்பகப்பூ தலையில் வைத்துக் கொண்டால் பார்வை கூர்மை உண்டாகும். அது போல உடல் சோர்வை நீக்க தாழம்பூ வைத்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். தாழம்பூ நல்ல வாசம் தருவதோடு மட்டுமல்லாமல், நம்மை உற்சாகத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவும். தாமரை பூவை சூடி கொள்பவர்களுக்கு மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி விடுமாம். அடிக்கடி தாமரை மலரை சூடிக் கொண்டால் மன இறுக்கம் தளர்ந்து ஒருவித புத்துணர்ச்சி அடையலாம்.

கிராமத்து பெண்கள் அதிகம் கனகாம்பரப் பூவை விரும்புகின்றனர். இந்த கனகாம்பரம் பூவை அடிக்கடி வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு தலைவலியே வருவதில்லையாம். இந்த அளவிற்கு பல்வேறு மருத்துவ பலன்களைக் கொடுக்கக் கூடிய பூச்சூடல் எனும் முறையை மறந்துவிடாமல் தொடர்ந்து பெண்கள் கடைப்பிடித்து வருவது மிகவும் நல்லது.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (28-01-2022)

மேஷ ராசி

நேயர்களே, உங்களைப் அருமை, பெருமைகளை மற்றவர்கள் புரிந்துக் கொள்வர். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை வளரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டு. மனதில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் குதூகலம் நிறையும். யதார்த்தமாக பேசுவதை கூட சிலர் தவறாக புரிந்துகொள்வர். வேற்றுமதத்தவர் வலிய வந்து உதவுவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி

நேயர்களே, உங்கள் திறமைகளை வெளிப்பட ஆரம்பிக்கும். முக்கிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்ப பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். வீடு மாற்றும் எண்ணம் வரும். விருந்தினர்களின் வருகை சந்தோஷத்தை தரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். திடீர் பண விரையம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரியமானவர்கள் நேசம் கரம் நீட்டுவர். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத மருத்துவச் செலவுகள் வரும். மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

தனுசு ராசி

நேயர்களே, புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி பெரும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைக்கும். ஆன்மீக ஆர்வம் கூடும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்ப சிக்கல்கள் குறைய தொடங்கும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். பெற்றோரின் அன்பை பெற முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி

நேயர்களே, அடுத்தவர்களை நம்பி எந்த வேலையும் செய்ய வேண்டாம். திட்டமிட்ட பயணங்கள் தாமதப்படும். ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு உறுதியான கொரோனா தொற்று..!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் பதிவில் அவர் இதனை அறிவித்துள்ளாா்.

அந்த பதிவில், “ கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் தொடர்பு கொண்ட அனைவரையும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளாா்.

முப்படை வீரர்களை உள்ளடக்கி சிறிலங்காவில் புதிய “ஸ்பீட் படையணி”…!

0

இலங்கை – சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை சமாளிக்க முன்னாள் முப்படை வீரர்களை உள்ளடக்கிய 500 பேர் கொண்ட “ஸ்பீட் படையணி” (SPEAT Force) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மேலும்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ், தேசிய கொள்கைக் கட்டமைப்பிற்கு இணங்க, SPEAT Force என்ற படையணி சிறைத்துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை “Sri Lanka Prisons Emergency Action and Tactical Force” (SPEAT Force) என்ற பெயரில், இதன் முதல் குழுவின் 194 பேர் நான்கு மாத நீண்ட பயிற்சிகளை முடித்து நேற்று அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சிறைக் கைதிகளைக் கையாளும் போது சுய ஒழுக்கத்துடன் வலுவூட்டப்பட்ட மனிதாபிமான அணுகுமுறையுடன் இந்தப் படையினர் தமது பணிகளை மேற்கொள்வர்கள் எனவும்,

சிறைத் தண்டனை முடிந்து மீண்டும் சமூகத்திற்குள் நுழையும் முன், கைதிகளை பயனுள்ள குடிமக்களாக மாற்றுவது இந்தப் படையணியின் கடமையாகும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் 71 மாணவர்களின் கண்களை குறிவைத்த தனியார் கண் மருத்துவ நிறுவனம்

கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில் சந்தேமடைந்து அந்த மாணவர்களின் கணிசமான பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர்களின் எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதனை தொடர்ந்து கண்டாவளை வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டேன் அவர் அப்போது தனது பணியின் பயிற்சி ஒன்றுக்காக விடுமுறையில் இருந்தார்.

இருப்பினும் அவருக்கு இது தொடர்பில் தெரியவில்லை என்பதோடு அவரது அலுவலகத்தில் இது தொடர்பில் அனுமதிபெறவோ அல்லது அறிவிக்கவோ இல்லை என்பதும் அறிந்துகொண்டு மேலும் சில அதிகாரிகளை தொடர்பு கொண்டு விடயத்தை ஆராய்ந்த போது இதற்கு பின்னால் வியாபார நோக்கம் இருந்ததை அறிந்து கொண்டு அதனை அம்பலப்படுத்தினேன்.

இதற்கு பின்னர் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினார்கள் அதன் விளைவு மருத்துவ மாபியாக்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனைமேற்கொண்ட தனியார் கண் மருத்துவ நிறுவனம் ஒன்று 71 மாணவர்களுக்கு கண்பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களதுமருத்துவ நிலையத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் போது மேலதிக பரிசோதனை மேற்கொண்டதில் 10 மாணவர்களை தவிர ஏனைய 61 மாணவர்களுக்கும் கண்ணில் பாதிப்பு உண்டு எனவும் இவர்கள் மூக்கு கண்ணாடி பயன்படுத்த வேண்டும் என்றும் குறித்த நிறுவனத்தினரால் தெரிவிக்கப்பட்டு கண்ணாடிகளின் விலைகளும் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் சந்தேகம் எழுப்பட்ட நிலையில் நடவடிக்கையில் இறங்கிய சுகாதார பிரிவினர் அம்மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கண் வைத்திய நிபுணரிடம் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

அதன்படி படிப்படியாக மாணவர்கள் அழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

71 மாணவர்களில் வருகை தந்த 55 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 38 மாணவர்களுக்கு கண்ணில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் , ஏனைய 17 மாணவர்களுக்கு கண்ணில் சிறு குறைபாடுகள் இருப்பதாகவும் மாவட்ட கண் வைத்தியர் அறிக்கையிட்டிருந்தார் என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

எனவே இதன் மூலம் தங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஏழை மாணவர்களை குறித்த நிறுவனம் பயன்படுத்தியமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் கல்வி மற்றும் சுகாதார துறையினர் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடற்படையில் மீண்டும் இணைந்த பி 494 ரக அதிவேக தாக்குதல் கப்பல்!

0

இலங்கை கடற்படையில் பி 494 ரக அதிவேக தாக்குதல் இயந்திரக் கப்பலை கையளிக்கும் நிகழ்வு கிழக்குப் பிராந்திய கடற்படையின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சஞ்வீச டயஸின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு திருகோணம‍லையிலுள்ள கடற்ப‍டையின் கடற்பரப்புப் பகுதில் நடைபெற்றது. 1997 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பி 494 ரக அதிவேக தாக்குதல் இயந்திரக் கப்பலானது, கொழும்பு கப்பல் கடற் பரப்பில் 22 ஆண்டு காலமாக தொடர்சியாக பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்த இயந்திரக் கப்பலை அதி நவீன மயப்படுத்துவதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அறிவுரைக்கு அமைவாக கிழக்குப் பிராந்திய கடற்படை பொறியிலாளர்கள் பிரிவால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பழுதுபார்த்தல் வேலைத்திட்டமானது இந்த வருடம் முடிக்கப்பட்டது.

திருத்தியமைக்கப்பட்ட பி 494 ரக அதிவேக தாக்குதல் இயந்திரக் கப்பலில் உள்ளேயும் வெளியேயும் காணப்படும் பாகங்கள், பிரதான இயந்திரம், ஜெனரேட்டர் இயந்திரம், கியர் பொக்ஸ் என்பன புதிய செயற்பாட்டுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

கப்பலை கையளிக்கும் நிகழ்வில் , கமாண்டோ வசந்த கந்தவின்ன, கடற்படை மற்றும் சமுத்திர விஞ்ஞான பீடத்தின் கட்டளைத் தளபதி கமாண்டோ டேமியன் பெர்னாண்டோ, அதிவேக தாக்குதல் 4 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி கமாண்டோ ராஜபிரிய சேரசிங்க உள்ளிட்ட கிழக்குப் பிராந்திய கடற்படையின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான புதிய நடைமுறை

0

வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டியை சுகாதார அமைச்சு இன்று (27) வெளியிட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெற்றோருடன் வருகைதரும் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள், கொவிட் பரிசோதனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்படுவர்.

12 முதல் 18 வயதுக்குட்பட்ட, ஒரு பைஸர் தடுப்பூசி செலுத்தியுள்ள சிறுவர்கள் தங்களுக்கு தமது பெற்றோருடன் வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களது அறிக்கைகளுக்கு அமைய தீர்மானிக்கப்படும். அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் 7 ​​முதல் 14 நாட்கள் வரை மாறுபடலாம்.

கொவிட் தொற்றுக்கு எதிரான ஒரு தடுப்பூசியைப் பெற்ற, கடந்த ஆறு மாதங்களில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் உட்பட இலங்கை வரும் அனைத்து வெளிநாட்டவர்களும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களாக கருதப்படுகிறது.

நாட்டிற்கு வந்தவுடன் விமான நிலையத்தில் நடத்தப்படும் PCR பரிசோதனையின்போது 30க்கும் குறைவான CT பரிசோதனை முடிவுகளைக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர்கள் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு இணங்கி விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.

மேற்படி பெறுபேறுகளை கொண்டவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருந்தால் மட்டுமே அவர்கள் விமான நிலையத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள். போன்ற மேலும் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய-இலங்கை உறவு தொடர்பில் இந்திய பிரதமர் வெளியிட்ட பதிவு

இந்திய – இலங்கை மக்களுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்நாட்டு மக்களுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இலங்கை பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்தப் பதவில் பிரதமர் மஹிந்த ராஜபக்வுக்குஷ நன்றி. இரு நாடுகளும் சுதந்திரத்தின் 75 ஆண்டு மைல்கல்லை கொண்டாடும் இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்தது எனக் கூறியுள்ளார்.

அத்துடன் நம் நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தாழிறங்கிய பாலம் – வீதியால் செல்பவர்கள் அவதானம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் முற்காலம் தொட்டே முதன்மையான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

பாலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெடிப்பு மற்றும் பாதிப்புக்கள் சீர்செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பாலத்தில் ஒரு பகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் இவ் வீதியினை பயன்படுத்தும் சாரதிகள், கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்அவதானமாக பயணிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நீண்டகாலமாக குறித்த பாலம் புனரமைக்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பாலத்தினை புனரமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.