பிந்திய செய்திகள்

பெண்களுக்கு உடலில் இரும்பு போல பலம் கிடைக்க இதை சாப்பிடுங்க!

பெண்கள் மட்டும் தான் இந்த லட்டுவை சாப்பிட வேண்டுமா. மற்றவர்கள் சாப்பிடக் கூடாதா, என்று நினைக்க வேண்டாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த லட்டுவை தினமும் 1 என்ற கணக்கில் சாப்பிட்டு வரலாம். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகள் வராமல் தடுக்க இந்த லட்டு பயனுள்ளதாக அமையும்.

வளரும் குழந்தைகளுக்கு சீரான ஊட்டச்சத்து கிடைக்க மாலை நேரத்தில் இந்த ஒரு லட்டுவை ஸ்நாக்ஸாக கொடுத்தாலே போதும். இவ்வளவு சத்து நிறைந்த லட்டுவை நம் வீட்டிலேயே நம் கையாலேயே சுலபமாக செய்வது எப்படி தெரிந்து கொள்வோமா.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து விட்டு அதில் பிஸ்தா – 100 கிராம், முந்திரி பருப்பு – 100 கிராம், பாதாம் பருப்பு – 100 கிராம், இந்த மூன்று பருப்பு வகைகளையும் பொடியாக உடைத்து போட்டு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வறுக்க வேண்டும்.

இந்த மூன்று பருப்பு வகைகளையும் கட்டாயம் சிறு சிறு துண்டுகளாக உடைத்து தான் போட வேண்டும். முந்திரிப்பருப்பை கையாலேயே உடைத்து விடலாம். பாதாம் பருப்பையும் பிஸ்தா பருப்பையும் ஒரு கத்தியை வைத்து கொஞ்சம் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

நெய்யில் வறுத்த இந்த 3 நட்ஸ் வகைகளை நெயில் இருந்து வடித்து எடுத்து ஒரு அகலமான பவுலில் கொட்டி விடுங்கள். அடுத்தபடியாக கடாயில் மீதமிருக்கும் நெய்யில் உலர் திராட்சை – 100 கிராம் போட்டு, உப்பி வரும்வரை அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து கொள்ள வேண்டும். வறுத்த இந்த திராட்சையையும் அகலமான பௌலில் வைத்திருக்கும் பருப்பு வகைகளில் கொட்டி கலந்து விடுங்கள்.

அடுத்தபடியாக அதே கடாயில் மீதமிருக்கும் நெய்யில் பேரிச்சம்பழம் – 200 கிராம், அளவு போட்டு 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ள வேண்டும். பேரிச்சம் பழத்தில் இருக்கும் கொட்டையை நீக்கி விடுங்கள்.

இந்த பேரிச்சம்பழம் மணக்க மணக்க வதங்கினால் லேசாக சாப்டாக மாறிவிடும். இந்த பேரிச்சம் பழத்தை நன்றாக ஆற வைத்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் விழுதாக அரைத்து விடவேண்டாம். ஓரளவுக்கு பேரிச்சம் பழம் அரைபட்டால் போதும்.

அரைத்த இந்த பேரிச்சம் பழத்தையும் வறுத்து வைத்திருக்கும் நட்ஸ் பவுலில் கொட்டி விடுங்கள். ஏலக்காய் பொடி கொஞ்சம் தூவி உங்கள் கையில் நெய்யை தடவி இந்த எல்லாப் பொருட்களையும் நன்றாக சப்பாத்தி மாவு பிசைவது போல அழுத்தம் கொடுத்து பிசைந்து கொடுத்து, சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்தால் சூப்பரான லட்டு தயார்.

பிஸ்தா – 100 கிராம், முந்திரி பருப்பு – 100 கிராம், பாதாம் – 100 கிராம், உலர் திராட்சை – 100 கிராம், இந்த நான்கு பொருட்களையும் நெய்யில் வறுக்கவும். 200 – கிராம் அளவு பேரிச்சம் பழத்தை நெய்யில் வதக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து, வறுத்த நட்போடு போட்டு பிசைந்து லட்டு பிடிக்க வேண்டும் அவ்வளவுதான். (உங்களுக்கு தேவைப்பட்டால் வால்நட், வேர்க்கடலை கூட இந்த லட்டுவில் சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

இந்த லட்டுவை ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். பிரிட்ஜில் வைத்தால் 30 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். உங்கள் கையாலேயே ஆரோக்கியமான இந்த லட்டுவை செய்து குழந்தைகளுக்கு கொடுங்க மறக்காமல் நீங்களும் ஒரு லட்டு சாப்பிடுங்க. சந்தோஷமான மனநிறைவு கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts