பிந்திய செய்திகள்

எளிய புதிய 10 சமையல் குறிப்புகள்!

ஆண், பெண் வித்தியாசமின்றி தங்கள் திறமையை நிரூபிக்கும் இந்த சமையல் கலையில் நீங்கள் இந்த சில விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால் ரொம்பவே உபயோகமாக இருக்கும்.

குறிப்பு 1:
தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள மோர் மிளகாய் செய்யும் பொழுது கொஞ்சம் பாகற்காய்களையும் வில்லை போட்டு வத்தல் செய்து விடுங்கள். காரமும், கசப்பும் சேர்ந்து ரொம்பவே சுவையாக இருக்கும்.

குறிப்பு 2:
அரிசி குருணை உப்புமா செய்பவர்கள் சம அளவிற்கு சேமியாவை வறுத்து குருணை பாதி வெந்ததும், சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கி, அரை மூடி எலுமிச்சை பிழிந்து பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் கூடிய உப்புமா தயார்.

குறிப்பு 3:
சமையலில் கிரேவி வகைகளில் சமைக்கும் உணவுகளில் கொஞ்சம் வேர்க்கடலையை தோல் உரித்து 20 நிமிடம் ஊற வைத்து நைசாக அரைத்து சேர்த்து பாருங்கள் ரிச்சான, செம டேஸ்டியான கிரேவி தயார்.

குறிப்பு 4:
பெருங்காயத்தை உடைப்பதற்கு கஷ்டமாக இருந்தால் இரும்பு வாணலியில் கொஞ்ச நேரம் வைத்தால் இளக ஆரம்பிக்கும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து தனித்தனியாக பிரித்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளலாம். சமைக்கும் பொழுது பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும்.

குறிப்பு 5:
ஜவ்வரிசி வத்தல் அல்லது அரிசி கூழ் வத்தல் செய்யும் பொழுது பொதுவாக ஜீரகம் போடுவார்கள். அதற்கு பதிலாக கொஞ்சம் கசகசாவை பொடித்து சேர்த்து வடாம் தயாரித்தால் மணமும், ருசியும் அபாரமாக இருக்கும்.

குறிப்பு 6:
எண்ணெய் பலகாரங்கள் செய்யும் பொழுது எண்ணெய் காறல் இல்லாமல் இருக்க கொதிக்கும் எண்ணெயில் கொஞ்சம் புளியை சேர்த்து கரியவிட்டு பின் எடுத்துத் தூக்கிப் போட்டு விடுங்கள். அதன் பின்பு உணவுப் பண்டங்களை பொரித்து எடுத்தால் காறல் இருக்காது.

குறிப்பு 7:
முறுக்கு பிழிய மைதா மாவை தண்ணீர் ஊற்றி பிசையாமல், நீராவியில் வேக வைத்து எடுத்து தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் நெய் கூடுதலாக கலந்து பிசைந்து முறுக்கு பிழிந்து பாருங்கள் கரகரப்பாக, டேஸ்ட்டியாக இருக்கும்.

குறிப்பு 8:
முற்றிய பாகற்காயாக இல்லாமல் பார்த்து எடுத்து சிறுசிறு வில்லைகளாக நறுக்கி அதனை நீங்கள் எலுமிச்சை சாற்றில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரம் நன்கு ஊறிய பின்பு அவ்வபோது குலுக்கி வெயிலில் போட்டு காய வைத்து எடுத்துப் பாருங்கள். கொஞ்சம் கூட கசப்பு இல்லாமல் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.

குறிப்பு 9:
இட்லிக்கு தொட்டுக் கொள்ள சட்னி அரைக்கும் போது கடைசியாக தாளிக்க கொஞ்சம் நல்லெண்ணெய்யும், கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து பாருங்கள், இன்னும் ரெண்டு இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள்.

குறிப்பு 10:
பூரி சுடுவதற்கு கோதுமை மாவு பிசையும் பொழுது அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்து எடுத்தால் நீண்ட நேரம் பூரி நமத்துப் போகாமல் அப்படியே புசுபுசுன்னு இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts