நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த நாம் எடுக்க கூடிய முக்கிய வழி ஆகும்.
இதைக் கருத்தில் கொண்டு நெல்லி மற்றும் பீட்ரூட் ஆகிய இரண்டு சூப்பர் ஹெல்தி பொருட்களின் நன்மையை உள்ளடக்கிய ஆரோக்கிய பானத்தை நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த சீசன் மாற்ற நேரத்தில் ஆம்லா-பீட்ரூட் பானம் தரும் ஆரோக்கிய நன்மைகள்..
டீடாக்ஸ் செய்ய உதவுகிறது
பீட்ரூட்டில் இருக்கும் betalains ஒரு வகை பைட்டோநியூட்ரியன்ட்ஆகும். இது ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. மறுபுறம் நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை பீட்ரூட்-அம்லா ஜூஸை ஒரு சிறந்த டீடாக்ஸ் பானமாக மாற்றுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பீட்ரூட்டில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இவை உடலில் ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்களை (RBC) உருவாக்கி, நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடும். அதேபோல் ஆம்லாவில் வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியிருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஜூஸாக குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை சிறப்பாக அதிகரிக்க செய்கிறது.
ஆற்றலை தக்க வைக்கும்
ரத்த நாளங்கள் சிறப்பாக செயல்பட பீட்ரூட் உதவுகிறது. இதனால் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் ஓட்டம் அதிகரிக்கிறது. எனவே நாள் முழுவதும் அதிக சுறுசுறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் உணர உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள க்வெர்செடின், கேலிக் ஆசிட் கொரிலாஜின் மற்றும் எலாஜிக் ஆசிட்கள் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவும்
சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க நெல்லிக்காய் பயனுள்ளது. இதிலிருக்கும் வைட்டமின் சிஉடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் (WBC) உற்பத்தியை அதிகரித்து நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. கூடுதலாக பீட்ரூட் சளி அறிகுறிகளை குறைக்கிறது.
குடல் ஆரோக்கியம்
ஆம்லா இயற்கையிலேயே காரத்தன்மை கொண்டது, இது குடல்-ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும். மறுபுறம் பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்க உதவுகிறது. ஆரோக்கியமான குடல் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்திற்கு ஆம்லா – பீட்ரூட் ஜூஸ் உதவும்.