தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் 1 கப்,
காலிஃப்ளவர் தண்டு 1 கப்,
பால் 3 கப்,
நெய் 3 தேக்கரண்டி,
மைதா 2 தேக்கரண்டி,
எண்ணை 1 தேக்கரண்டி,
உப்பு தேக்கரண்டி,
வெங்காயம் 1,
மிளகு தேக்கரண்டி,
பூண்டு 6 பல்.
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை மிக மிக சின்னத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இனி வாணலியில் நெய்யை விட்டு சூடுபடுத்தவும். அதில் காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி மிளகு, உப்பு போட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து வாணலியில் எண்ணை விட்டு அரைத்த காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை இட்டு சிறிதுநேரம் கழித்து மைதா மாவை கலக்கவும்.
அடுத்து தீ மெதுவாக எரியவேண்டும். பின்னர் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக சூடேறியதும் எடுத்து ஆற விடுங்கள். பிறகு முன்னதாக தயாரித்து வைத்து இருந்த காலிஃப்ளவர் மசியலை எடுத்து கலக்கி மீண்டும் சூடுபடுத்தவும். இப்போது மேலும் ஒரு கப் தண்ணீர், ஒரு கப் பாலை கலக்கவும். இப்போது சூப் ரெடி.