பிந்திய செய்திகள்

ஜெல்லி மிட்டாய்

தேவையான பொருட்கள்:

கருப்பு நிற திராட்சை பழங்கள் – 200 கிராம்,

சர்க்கரை – 2 ஸ்பூன்,

கான்பிளவர் மாவு – 2 ஸ்பூன்.

முதலில் திராட்சை பழங்களை நன்றாகக் கழுவிவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து திராட்சைப் பழத்தில் இருந்து ஜூஸ் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

திப்பியை வடிகட்டி தனியாக எடுத்து விட வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, முதலில் திராட்சை பழ சாரை ஊற்றிக் கொள்ளுங்கள்.

அந்த சாறுடன் 2 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் கார்ன் ஃபிளவர் மாவையும் சேர்த்து கட்டிப்படாமல் கலக்கி வைத்து அதன் பின்பு அடுப்பை பற்ற வையுங்கள்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து இந்த கலவையை கலந்து விட்டுக் கொண்டே வரவேண்டும்.

தண்ணீர் பதத்தில் இருக்கும் இந்த கலவை, நன்றாக கெட்டு பதம் வரும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு ஜெல் பதம் வர வேண்டும். இதற்கு 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை எடுக்கும்.

இப்போது ஃப்ரீசரில் வைக்கக்கூடிய ட்ரே, அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் குழியான தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி, இந்த ஜெல்லை அந்த ட்ரைவில் ஊற்றி கொஞ்சம் நேரம் ஆறிய பின்பு, அப்படியே ஃப்ரீஸரில் வைக்க வேண்டும்.

அதன் பின்பு மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் கழித்து வெளியே எடுத்துப் பாருங்கள். ஜெல்லி நன்றாக டிரேவில் செட் ஆகியிருக்கும்.

இதை கத்தியைக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து, சர்க்கரையில் பிரட்டி எடுத்தால் நாம் எல்லோரும் சிறுவயதில் ருசித்து சாப்பிட்ட ஜெல்லி மிட்டாய் தயார்.

உங்களுக்கு வண்ணங்கள் நிறைய தேவை என்றால் அதற்கு ஏற்றார்போல் பலவகையான பழங்களைப் பயன்படுத்தி கொள்ளலாம். மாதுளம் பழம், ஸ்ட்ராபெரி, மாம்பழம் இப்படிப் பட்ட பழங்களைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts