பிள்ளைகளுக்கு வீட்லேயே ருசியாக செய்து கொடுக்க கூடிய வெஜ் கட்லெட்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 250கி
பச்சை பட்டாணி – 50கி
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி
இஞ்சி பூண்டு விழுது – ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
ரவை – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
மைதா, ரஸ்க்தூள் – 3 டீஸ்பூன்
வெஜ் கட்லெட் செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து, நன்றாக மசித்து கொள்ளவும். பச்சை பட்டாணி வேகவைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைக்கும் போது, அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் பதமாக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசையவும்.
பிசைந்து வைத்துள்ள கட்லெட் மிக்ஸிங்யில், சிறிதளவு ரவையை சேர்த்தால், அதில் உள்ள ஈர தன்மையை உரித்து விடும்.
அதனுடன் சிறிதளவு ரஸ்க்தூள் சேர்த்து நன்றாக பிசையவும்.
எலுமிச்சையளவு உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும். எந்த மாதிரி வடிவில் வேண்டுமானலும் கட்லெட் செய்து கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்து கொள்ளவும், மாவுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியான இட்லி மாவு பதத்தில் கலக்கவும்.
செய்து வைத்துள்ள கட்லெட்யை மைதா மாவில் புரட்டி கொள்ளவும்.
அடுத்து ரஸ்க்தூளில் புரட்டி தட்டில் வைத்துக் கொள்ளவும்.
வாணிலையில் எண்ணெய் சூடான, பிறகு செய்து வைத்துள்ள கட்லெட்யை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இத்துடன் தக்காளி சாஸ் வைத்து வெஜ் கட்லெட் – Veg Cutlet சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.