பிந்திய செய்திகள்

5 பிரெட் துண்டு இருந்தால் இவ்வளவு சுவையான காலை உணவை சமைக்க முடியுமா !

காலை உணவை சமைப்பதற்கு சற்று சோம்பேறி தனமாகவே இருக்கும். அல்லது உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரத்தில் சமைப்பது என்பது கடினமான விஷயமாக இருக்கும். எனவே வீட்டில் இருக்கும் சில பிரட் துண்டுகளை வைத்து எளிமையாக செய்ய சில உணவுகள் இருக்கின்றன. அதிலும் மிகவும் அதிக சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சற்று மொறு மொறுவென இருக்கும் சுவையான ஒரு உணவைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதனை செய்வதற்கு நேரமும் குறைவாக தான் செலவாகும். இதில் சேர்க்க வேண்டிய பொருட்களும் குறைவாகத்தான் தேவைப்படும்.

தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் – 5, முட்டை – 1, சர்க்கரை – ஒரு ஸ்பூன், ஜாம் – 5 ஸ்பூன், சோளமாவு – 2 ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், பால் – ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:

முதலில் ஐந்து பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றின் ஓரங்களை மட்டும் நறுக்கி தனியாக எடுத்து விட வேண்டும். அதன்பின் பூரி கட்டையை வைத்து பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக அழுத்தி தேய்த்து விட வேண்டும். அப்பொழுதுதான் இவை உருட்டுவதற்கு சரியான பதத்தில் இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts