பிந்திய செய்திகள்

சளி, இருமல் பிரச்சனை தீரவும், உடல் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருப்பதற்கும் இந்த மசாலா பொடி

அனைவரும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளையிலும் தவறாமல் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஒரு சிலர் காலை எழுந்தவுடனே கையில் டீ வேண்டும் என்று கேட்பார்கள். அதுபோல மாலை வந்ததும் ஒரு டீ குடித்தால் மட்டுமே அவர்களால் மற்ற வேலையை செய்ய முடியும். அவ்வாறு நமது உடம்பு எப்பொழுதெல்லாம் பலவீனமாக இருப்பது போல் தோன்றினாலும், இந்த டீ குடித்த உடன் சுறுசுறுப்பாக மாறிவிடும். எனவே அனைவரும் டீ விருப்பம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். அவ்வாறு பலரும் குடிக்கும் இந்த டீயை சற்று மசாலா சேர்த்து குடித்தால் சளி, இருமல் பிரச்சனை எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். காலை குடிக்கின்ற டி மாலை வரை நமது உடம்பை சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ளும். இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் அனைத்தும் இயற்கையாகவே நமது உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடியவையாகும். எனவே இந்த மசாலா பொடியை எப்போதும் வீட்டில் வைத்திருங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு தயார் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

மிளகு – அரை ஸ்பூன், கிராம்பு – ஒரு ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 2, ஏலக்காய் – ஒரு ஸ்பூன், சுக்குப் பொடி – ஒரு ஸ்பூன், ஜாதிக்காய் பொடி – கால் ஸ்பூன், பால் – ஒரு கப், சர்க்கரை – 2 ஸ்பூன்.

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, காடாய் சூடானதும் ஒரு ஸ்பூன் ஏலக்காய், அரை ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் கிராம்பு மற்றும் 2 துண்டு பட்டை இவை நான்கையும் ஒன்றாக சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை வறுக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவற்றை பொன்னிறமாக சிவந்து வரும் வரை வறுத்து விடக்கூடாது. சேர்க்கப்பட்டுள்ள மசாலாக்கள் சூடாகி இவற்றிலிருந்து நல்ல வாசனை வரும் பொழுது அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் இவற்றை ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த பொடியை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற வைக்க வேண்டும்

பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் சுக்குப் பொடி மற்றும் கால் ஸ்பூன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் காற்று புகாத ஒரு டைட்டான மூடி போட்ட பாட்டலில் இந்த பவுடரை சேர்த்து இறுக்கமாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பவுடரை 6 மாதம் வரை வைத்துப் பயன் படுத்திக்கொள்ளலாம். அரைத்து வைத்த அதே சுவையில் ஆறு மாதமும் மாறாமல் அப்படியே இருக்கும்.

பின்னர் அடுப்பின் மீது ஒரு கிண்ணத்தை வைத்து, அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றவேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு ஒரு கப் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும், இந்த மசாலா பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் பொடியை சேர்க்க வேண்டும் பிறகு ஒரு இரண்டு நிமிடம் இவை அனைத்தும் நன்றாக கொதித்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு வடிகட்டி குடித்து பாருங்கள் மிகவும் அருமையான சுவையில் சூப்பராக இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts