பிந்திய செய்திகள்

வீட்டில் ரவை மட்டும் இருந்தால் போதும் – சுலபாமான ஸ்நாக்ஸ்

இப்பொழுது குளிர்காலம் என்பதால் மாலை வேளை டீயுடன் சேர்த்து சாப்பிட சுட சுட ஏதாவது நாக்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆசைப்படுவதுண்டு. அவ்வாறு பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு அவர்கள் சாப்பிட சுவையான ஸ்நாக்ஸீ செய்து கொடுத்தால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அதிலும் வீட்டில் செய்யும் இந்த உணவு அவர்களுக்கு பிடித்தமான சுவையுடனும், பார்ப்பதற்கு பிடித்த வடிவத்திலும் இருந்தால் குழந்தைகள் நீங்கள் கொடுத்தவுடன் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி சாப்பிட்டு முடிப்பார்கள்.

அப்படி சுலபமான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

ரவை – ஒரு கப்

உப்பு – ஒரு ஸ்பூன்

சோடா உப்பு – கால் ஸ்பூன்

எண்ணெய் – கால் லிட்டர்

மிளகு தூள் – அரை ஸ்பூன்

கரம் மசாலா தூள் – கால் ஸ்பூன்

சில்லி பவுடர் – கால் ஸ்பூன்

தக்காளி சாஸ் – 5 ஸ்பூன்,

செய்முறை:

முதலில் ஒரு கப் ரவையை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் கால் ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொண்டு, அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மாவு பதத்தில் அரைக்க வேண்டும்.

இந்த மாவு மசால் வடை மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.

பிறகு இந்த மாவை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும்.

பின்னர் கையில் லேசாக எண்ணெய் தடவி கொண்டு மாவை சிறு சிறு பகுதியாக எடுத்து உருண்டையாக பிடித்து வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் நன்றாக சூடானதும் உருண்டைகளை எண்ணெயில் சேர்க்க வேண்டும்.

ஒரு முறை எண்ணெயில் போடும் பொழுது 10 உருண்டைகளாக போட்டு பொறிக்கலாம்.

இந்த உருண்டைகள் எண்ணெயில் பொரியும் பொழுது அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு உருண்டைகள் அனைத்தும் நன்றாக சிவந்து வந்ததும் வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

பின்னர் பிடித்து வைத்துள்ள அனைத்து உருண்டைகளையும் இவ்வாறு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இவை மிதமான சூட்டில் இருக்கும் பொழுதே இவற்றுடன் அரை ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் மிளகாய்த் தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்துவிட வேண்டும்.

பிறகு இவற்றை அனைவருக்கும் சாப்பிடக் கொடுத்தால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

அதோடு இவற்றுடன் தொட்டுக்கொள்ள தக்காளி சாஸையும் சேர்த்துக் கொடுத்து பாருங்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts