பிந்திய செய்திகள்

பெண்களுக்கு பயனுள்ள 10 சமையல் குறிப்புகள்!

குறிப்பு 1:

டீத்தூள் வைத்திருக்கும் டப்பாவில் சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து வைத்து விட்டால் போதும் டீ குடித்ததும் தலை வலி பறந்தே போய்விடும். டீத்தூள் வாங்கிய உடனே இவ்வாறு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு 2:

வடகம் தயாரித்து வைத்திருப்பவர்கள் மழைக் காலங்களில் அது நமத்து போய்விடும் என்பதால் சரியாக பொரிய செய்யாது. இதற்காக வடகத்தை கொஞ்சம் வெறும் வாணலியில் போட்டு வறுத்து விட்டு பொரித்தால் ரொம்பவே சூப்பராக பொரியும்.

குறிப்பு 3:

தேங்காய் சட்னி அரைப்பவர்கள் ஒருமுறை இப்படி அரைத்துப் பாருங்கள். எந்த அளவிற்கு தேங்காயை எடுத்து கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு இணையாக கொத்தமல்லியை சேர்த்து தேங்காய் சட்னி அரையுங்கள், வித்தியாசமாக ரொம்பவே சூப்பரான சுவையுடன் இருக்கும்.

குறிப்பு 4:

வெங்காயம் சேர்த்து ஊத்தாப்பம் செய்யும் பொழுது இரண்டு பக்கமும் நன்றாக வெந்து இருந்தால் தான் சூப்பராக இருக்கும் எனவே தோசை சுடும் பொழுது நடுவில் ஒரு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றி விடுங்கள். ரொம்பவே சுவையாகவும், எளிதாகவும் வெந்து வரும்.

குறிப்பு 5:

தோசை மாவு அரைக்கும் பொழுது அரிசி, உளுந்துடன் சேர்த்து ஒரு கிலோ மாவு அரைக்க பட்டாணி மற்றும் வேர்க்கடலை தலா 50 கிராம் சேர்த்து ஊற வைத்து அரைத்தால் சத்துள்ள, நல்ல நிறமான அசத்தலான சுவையுள்ள ஹெல்த்தி தோசை தயார்!

குறிப்பு 6:

மதியம் சமைத்த சாதம் இரவில் மிஞ்சி விட்டால் 2 பங்கு தண்ணீர் கொதிக்க வைத்து அதில் இந்த சாதத்தை போட்டு ஒரு கொதி வர இறக்கி வடித்து, இரண்டு நிமிடம் அடுப்பில் மீண்டும் வைத்து பின்னர் பரிமாறினால் நீரில்லாமல் புதியதாகச் சமைத்தது போல சாதம் பொல பொலவென்று இருக்கும்.

குறிப்பு 7:

ஃப்ரூட் ஜாம் தயாரிப்பவர்கள் பழுத்த பழங்களாக தேர்ந்தெடுக்காமல், பழுத்தும், பழுக்காமலும் இருக்கும் பழங்களாக பார்த்து தேர்ந்தெடுத்து ஜாம் தயாரித்தால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். குறிப்பு 8: காலிஃப்ளவர் சமைக்கும் முன்னர் நன்கு கொதித்த தண்ணீரில் உப்பு சேர்த்து பத்து நிமிடம் காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு முக்கி எடுக்க வேண்டும். அப்போது தான் அதில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு புழுக்கள் நீங்கும்.

குறிப்பு 9:

எந்த பருப்பை நீங்கள் சாம்பார் வைக்க பயன்படுத்தினாலும் குக்கரில் பருப்பை வேக வைக்கும் முன்னர் கொஞ்சம் மஞ்சள் தூளையும், ஒரு ஸ்பூன் நெய்யையும் சேர்த்து பாருங்கள். சாம்பார் மணம் வீட்டைத் தாண்டி தெருவுக்கே சென்று விடும்.

குறிப்பு 10:

உங்களிடம் காய்ந்து போன பிரட், பன் போன்றவை இருந்தால் கொஞ்சம் போல தண்ணீர் ஊற்றி ஊற வைத்து பிசைந்து கொள்ளுங்கள். பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கெட்டியாக பிசைந்து வடை தட்டுவது போல தட்டி கொதிக்கும் எண்ணெயில் வைத்து பொரித்து எடுத்து பாருங்கள். வித்தியாசமான சூப்பரான பஜ்ஜி தயார்!

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts