பிந்திய செய்திகள்

வெறும் 5பொருட்களை வைத்து இந்த ரெபிசியை செய்து பாருங்கள்

பள்ளி முடித்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு வீட்டில் ஏதாவது ருசியாக இருக்கும் என்ற எண்ணத்தில் வருவதுண்டு. அப்படி வரும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த உணவு வீட்டில் இல்லை என்று தெரிந்தால் மிகவும் அடம்பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்பொழுது எனக்கு இதை செய்து தாருங்கள், எனக்கு உடனே இதை சாப்பிட வேண்டும் என்று தொல்லை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தைகளை சமாதானம் செய்ய வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் அவர்களை கொஞ்சமாவது சமாதானம் செய்ய முடியும். அதற்கு அனைவரது வீட்டிலும் எப்பொழுதும் இருக்கும் கோதுமை மாவை வைத்து செய்யக்கூடிய காரசாரமான மொறுமொறுவென்று இருக்கும் தட்டை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – அரை கிலோ

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்,

உப்பு – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – அரை லிட்டர்

செய்முறை:

முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து கொள்ள வேண்டும்.

கடாய் நன்றாக சூடானதும் அதில் அரை கிலோ கோதுமை மாவை சேர்த்து கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை சிம்மில் வைத்து, கோதுமை மாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்த கோதுமை மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பிறகு கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கட்டிகள் இல்லாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்த உடன், அதன் மீது லேசாக எண்ணெய் தடவி, 10 நிமிடம் ஊற வைத்துவிட வேண்டும்.

பிறகு இந்த மாவினை கொஞ்சம் பெரிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒவ்வொரு உருண்டையாக எடுத்து அதை சிறிதளவு கோதுமை மாவில் பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பின் மேடையை சுத்தம் செய்து, அதன்மீது ஒவ்வொரு உருண்டையாக வைத்து, சப்பாத்தி கட்டை வைத்து, சப்பாத்திக்கு தேய்ப்பது போல் மெல்லியதாக தேய்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு ஃபோர்க் ஸ்பூன் எடுத்து மாவின் மீது ஆங்காங்கே இலேசாக கொத்திவிட வேண்டும்.

ஒரே அளவிலான தட்டை செய்வதற்கு சிறிய கிண்ணத்தை வைத்து மாவின் மீது வட்ட வடிவில் அழுத்தி எடுக்க வேண்டும்.

பிறகு அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வட்ட வடிவில் வெட்டி வைத்துள்ள மாவினை ஒவ்வொன்றாக சேர்த்து சிவந்து வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts