பிந்திய செய்திகள்

ஜவ்வரிசியில் இருக்கும் நன்மைகள்..!

முத்துக்கள் போல் பளபளப்பாக இருப்பது தான் ஜவ்வரிசி. நாம் எதாவது பண்டிகைகளுக்கு சென்றால் நாம் சாப்பிடும் உணவான பாயாசத்தில் கண்டிப்பாக ஜவ்வரிசி உபயோகப்படுத்தி இருப்பார்கள்.

இந்த ஜவ்வரிசியை எப்படி தயாரிக்கிறார்கள் என்றும் இதனால் கிடைக்கும் நன்மைகளை குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம்.

மரவள்ளிக் கிழங்கு மற்றும் பதினைந்து வருடங்கள் ஆன பனைமரத்தின் தண்டுப் பகுதியை நிறைய சுத்திகரிப்பு செயல்கள் செய்து எடுக்கப்படும் ஸ்டார்ச்சிலிருந்து செய்யப்படுவதே ஜவ்வரிசி.

ஜவ்வரிசியை பாலுக்கு அடுத்ததாக பல இந்தியர்கள் குழந்தைக்கு கொடுக்கும் முதல் உணவாக பயன்படுத்துகின்றனர்.

இதை பொதுவாக பாயாசம் செய்யும் போது கெட்டி தன்மையை தருவதற்காக உபயோகப்படுத்துகின்றனர்.

இந்த ஜவ்வரிசியில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதன் ஆரோக்கிய நன்மைகளை குறித்து பார்ப்போம்.

சத்துக்கள்

ஜவ்வரிசியில் ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் , இரும்புச் சத்து, விட்டமின் ஏ, விட்டமின் சி என பலவிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

அல்சர்

சிலருக்கு அல்சர் நோய் ஏற்பட்டு வயிற்று வலியால் மிகவும் வேதனை அடைவர். இந்த வேதனையிலிருந்து சுகம் பெற ஜவ்வரிசியை உபயோகப்படுத்தலாம். இதன் குளு குளு தன்மை வலியை கட்டுப்படுத்துகிறது.

சிவப்பணுக்கள்

சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஜவ்வரிசி அதிகளவு உதவுகிறது. ஏனென்றால் இதில் தாராளமாக இரும்புச் சத்து உள்ளது.

இது சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. எனவே அனிமியா பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது.

ஆரோக்கியம்

ஜவ்வரிசியில் அதிகப்படியான புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இந்த சத்துகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய பொருளாகும்.

எனவே இதை தினமும் நாம் உபயோகப்படுத்தும் அரிசிற்கு பதிலாக பயன்படுத்தி நல்ல ஆற்றலை பெறலாம்.

எலும்பு நோய்கள்

இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து இருப்பதால் எலும்புகளின் சக்தியை அதிகரிக்கிறது.

இதனால் ஆஸ்ட்ரோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் கட்டுப்படுத்தலாம். மேலும் மூட்டுவலியை குறைக்கும். பயத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளதாக விளங்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

இதில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சி சத்து உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பற்கள்

பல் வலி மற்றும் பற்சொத்தை போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டுமானால் ஜவ்வரிசி அதிகம் சாப்பிட வேண்டும்.

மேலும் பற்களின் எனாமல் சீக்கிரத்தில் தேய்ந்து போகாமல் தடுக்கிறது. ஏனென்றால் இதில் உள்ள கால்சியம் பற்களின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகிறது.

உடல் பருமன்

இதில் குறைந்த அளவில் கொழுப்புச் சத்து இருப்பதால் எடை அதிகரிப்பதை தடுக்கும்.

இதய ஆரோக்கியம்

இதன் குறைந்த கொழுப்பு சத்து மற்றும் புரோட்டீன் இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.

வயிற்று போக்கு

நமது உணவு சரிவர செரிக்காமல் சில நேரங்களில் தொடர்ந்து வெளியேறி கொண்டே இருக்கும். பொதுவாக இது கெட்ட பாக்டீரியாவால் உண்டாகிறது.

இதற்கு ஜவ்வரிசி பெரிதும் உதவுகிறது. இதை எப்படி உபயோகப்படுத்த வேண்டுமென்றால் சிறிதளவு ஜவ்வரிசியை சூடான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

இந்த ஜவ்வரிசி மாவு குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக ஜவ்வரிசி உள்ளது. இது கார்போஹைட்ரேட் உணவாக இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts