பிந்திய செய்திகள்

பயனுள்ள சமையல் மற்றும் வீட்டு குறிப்புகள்!

இப்போது இருக்கும் அவசர உலகில் நாம் எதையும் சரியாக கவனிப்பது கிடையாது. எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு செய்வது என்பதும் முடியாத காரியமாகி விட்டது.

நம்முடைய நேரத்தையும், உழைப்பையும் மிச்சப்படுத்தும் வகையில் சில வீட்டு குறிப்புகளையும், சமையல் குறிப்புகளையும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால் ரொம்பவே உபயோகமாக இருக்கும்.

குறிப்பு 1:

துணி துவைக்கும் பொழுது அதில் சுருக்கம் இல்லாமல் இருப்பதற்கு நீங்கள் அலசி முடித்த பின்பு கடைசியாக ஒரு முறை நாலைந்து சொட்டுகள் கிளிசரின் சேர்த்து அலசிப் பாருங்கள் சுருக்கம் மறையும்.

குறிப்பு 2:

துணி காயப் போட நைலான் கயிறை வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கியவுடன் முதலில் கொஞ்சம் சோப்பு நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அலசி பயன்படுத்திப் பாருங்கள், நீண்ட நாட்கள் அறுந்து போகாமல் உழைக்கும்.

குறிப்பு 3:

எண்ணெய் பாட்டிலை கையாளும் பொழுது திடீரென கை தவறி எண்ணெய் கீழே சிந்திவிட்டால் உடனே யோசிக்காமல் அதன் மீது கோலப் பொடியை தூவி விடுங்கள். பிறகு துடைத்துப் பாருங்கள், கொஞ்சம் கூட எண்ணெய் பசை இல்லாமல் அழகாக வந்து விடும்.

குறிப்பு 4:

டீ தூளுடன் ஏலக்காய் விதைகளையும், அதன் மேல் தோலை குடிக்கும் தண்ணீரில் போட்டு வைத்தால் தாகம் தீர்க்கும் தண்ணீர் மிகுந்த ருசியாக மாறும். தேநீர் குடிக்கும் பொழுதும் கமகமக்கும் மணம் வீசும்.

குறிப்பு 5:

வெள்ளை துணிகள் மங்கலான நிறத்தில் இருந்து புதிதாக வாங்கியது போல பளிச்சென மின்ன செய்ய நீங்கள் துணி துவைக்கும் போது கொஞ்சம் வினிகர் சேர்த்து ஊற வைத்து துவைத்தால் போதும்.

குறிப்பு 6:

மிக்ஸி கிரைண்டர் போன்ற உபகரணங்களை சுத்தம் செய்யும் பொழுது பழைய டூத் பிரஷில், டூத் பேஸ்ட் கொஞ்சமாக வைத்து தேய்த்து கழுவி பாருங்கள், புதியது போல பளிச்சென இருக்கும்.

குறிப்பு 7:

பூண்டு வாங்கியவுடன் அதனை தனித்தனி பல்லாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும், அப்போது தான் பூஞ்சை பிடிக்காமல் இருக்கும். நீங்கள் உரிக்கும் போது கைகளில் ஒட்டாமல் இருக்க கொஞ்ச நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் உரித்து பாருங்கள்.

குறிப்பு 8:

தேங்காயை ரொம்ப சுலபமாக உடைக்க கொஞ்ச நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து அதன் குளிர்ச்சி தன்மையுடன் உடைத்து பாருங்கள், ரொம்பவே சுலபமாக நேர்த்தியாக உடையும். தேங்காயை எடுக்கவும் சுலபமாக வரும்.

candle

குறிப்பு 9:

மெழுகுவர்த்திகளையும் அப்படித்தான் பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொழுது எடுத்து பயன்படுத்தினால் அதிக நேரம் நின்று எரியும், சீக்கிரம் உருகவும் செய்யாது.

குறிப்பு 10:

மொத்தமாக பாகற்காய் வாங்குபவர்கள் அதன் மேற்புற மற்றும் அடி பாகத்தை வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வையுங்கள், அப்பொழுது தான் ஓரிரு நாட்களில் பழுக்காமல் அப்படியே இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts