பிந்திய செய்திகள்

முழு நெல்லிக்காய் நன்மைகள் இவ்வளவா!

ஆரஞ்சு, போன்ற சிட்ரஸ் பழங்களைக்காட்டிலும் இரண்டு மடங்கு வைட்டமின் C அரை நெல்லிக்காயில் உள்ளது. எனவே இதை வெறுமனே சாப்பிட்டாலும் சரி அல்லது நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து சுவைக்கு தேனும் சேர்த்துக் கொண்டால் சளி, தொண்டைக் கட்டுதல் போன்ற பிரச்னைகள் வராது.

நோய் எதிர்ப்புச் சக்தி :

உடலில் நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலை பெரிய நெல்லிக்காய் அளிக்கிறது. வேகமாகப் பரவும் கிருமிகள், நோய்த் தொற்றுகளையும் எதிர்கொள்ளும் ஆற்றலையும் அளிக்கிறது. எனவே முழு நெல்லிக்காயை ஜூஸ் போட்டுக் குடிக்கலாம் அல்லது உலர்ந்த அரை நெல்லிக்காயை அவ்வப்போது சாப்பிடலாம்.

ஜீரண சக்தி :

உணவு செரிமாணப் பாதையை சீராக்கி ஜீரண சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் ஜீரண கோளாறு தொடர்பான மலச்சிக்கல், வயிறு எரிச்சல், வாந்தி , குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கும் எளிய சிறந்த தீர்வு அரை நெல்லிக்காய். ஒருவேலை ஜீரணக் கோளாறு ஏற்பட்டால் உடனே வெதுவெதுப்பான நீரில் அரை நெல்லிக்காய் பொடியைக் கலந்து ஒரு கிளாஸ் குடியுங்கள். உடனே பலனை உணர்வீர்கள். இது பசியைத் தூண்டுவதிலும் சளைத்ததல்ல.

நீரிழிவு நோய்க்கும் நல்லது :

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக பராமரித்து கவனித்துக் கொள்ள முழு நெல்லிக்காய் மகத்தானது. எனவே தினசரி உணவோடு அரை நெல்லிக்காயையும் உட்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது :

தலைமுடி பிரச்னைகளுக்கான ஹேர் கேர் பொருட்களிலும் அரை நெல்லிக்காயும் முக்கிய பொருளாக இருக்கும். பொடுகு, தலை முடி உறுதி, முடி வளர்ச்சி, முடியை சேதமின்றி பாதுகாத்தல் என தலைமுடிப் பிரச்னைகளுக்கான அனைத்து தீர்வுகளும் நெல்லிக்காயில் உண்டு. ஜூஸ் போட்டு தினமும் காலை குடித்து வந்தாலும் முடி கருகருவென வளரும்.

பித்தத்திற்கு தீர்வு :

உடல் உஷ்ணம் காரணமாக பித்தம் அதிகமாகும். இதனால் உணவை உடல் ஏற்றுக்கொள்ளாது. தீராத தலைவலியும் உண்டாகும். இதற்கு முழு நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் அருந்தலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts