பிந்திய செய்திகள்

10 முக்கிய சமையல் சந்தேகங்களும், அதற்கான பதில்களும்

சந்தேகம் 1:

வாழைப்பூவை சுத்தம் செய்யும் பொழுது கைகளில் கறை படியாமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பதில்: சுத்தம் செய்வதற்கு முன்னர் கொஞ்சம் உப்பை கையில் பூசிக் கொண்டு அதன் பிறகு வாழைப்பூவை ஆய்ந்து பாருங்கள், கொஞ்சம் கூட கறை படியாது.

சந்தேகம் 2:

வெங்காய பஜ்ஜி செய்யும் பொழுது வெங்காயம் உதிராமல் அழகாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பதில்: வெங்காய பஜ்ஜி செய்வதற்கு முன்னர் வெங்காயத்தை வட்டமாக வெட்டிய பின்பு கொஞ்சம் எண்ணெயில் போட்டு வதக்கி எடுத்து பஜ்ஜி செய்து பாருங்கள், வெங்காயம் பிரியாமல் பஜ்ஜி சூப்பராக வந்துவிடும்.

சந்தேகம் 3:

சுட்ட சப்பாத்தியை வெகு நேரம் சூடாக வைத்துக் கொள்வது எப்படி தெரியுமா? பதில்: சப்பாத்தியை சுட்டு எடுக்கும் பொழுது உடனே அதனை ஒரு ஃபாயில் பேப்பர் அதாவது சில்வர் பேப்பரில் சுற்றி வைத்து விடுங்கள். நீண்ட நேரம் வரை சூடு குறையாமல் இருக்கும். பெரும்பாலான ஹோட்டல்களில் பார்சல் கொடுக்கும் பொழுது சப்பாத்தியை இப்படித்தான் சுற்றி கொடுப்பார்கள்.

சந்தேகம் 4:

வெல்லத்தை எளிதாக உடைப்பது எப்படி தெரியுமா? பதில்: வெல்லத்தை தட்டி உடைப்பதற்கு பதிலாக நீங்கள் கேரட் துருவும் துருவியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் பெரிய துளைகள் இருக்கும் பக்கத்தில் வெல்லத்தை வைத்து துருவினால் பூப்போல உதிரும்.

சந்தேகம் 5:

மொறுமொறுவென்று ரவை தோசை எளிதாக சுடுவதற்கு சரியான அளவு தான் என்ன? பதில்: 2 பங்கு ரவைக்கு ஒரு பங்கு அரிசி மாவு, ஒரு பங்கு மைதா மாவு சேர்த்து நீர்க்க கரைத்து கருவேப்பிலை எல்லாம் போட்டு கொஞ்சம் புளிக்க விட்டு மெல்லியதாக சுட்டு பாருங்கள், மொறுமொறுவென்று உடையாமல் வரும்.

சந்தேகம் 6:

ஃப்ரிட்ஜில் வைக்காமல் இட்லி, தோசைக்கு அரைத்த மாவை நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? பதில்: இட்லி, தோசைக்கு அரைத்த மாவுடன் ஒரு காய்ந்த மிளகாயை போட்டு வையுங்கள், ஓரிரு நாட்களுக்கு மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும்.

சந்தேகம் 7:

அடிப்பிடித்த குக்கரை எளிதாக பளிச்சென மாற்ற என்ன செய்யலாம்? பதில்: குக்கர் திடீரென அடி பிடித்து விட்டால் அதில் கொஞ்சம் புளித்த மோரை ஊற்றி மூடி வைத்து கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எடுத்து அவற்றை அகற்றிவிட்டு தேய்த்து பாருங்கள், புதியது போல பளிச்சென இருக்கும்.

சந்தேகம் 8:

நமத்துப் போன ஏலக்காய்களை அரைப்பது எப்படி? பதில்: ஏலக்காய்கள் நமத்து போய் விட்டால் அதனை நைஸாக அரைப்பது கடினமாக இருக்கும் எனவே வெறும் வாணலியில் கொஞ்சம் போட்டு வாட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்தால் நன்றாக அரைபடும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts