பிந்திய செய்திகள்

மசாலா காபி

நம்மில் பலர், காலைபொழுது விடிந்ததும் அந்த நாளை காபியுடன் தான் தொடங்குவோம். காபி உற்சாக பானமாகவும், ஆற்றலைத் தருவதாகவும் இருக்கும். உலகம் முழுவதும் காபி பிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள்.உலக நாடுகளில் உள்ள காபி சங்கங்கள் இணைந்து அக்டோபர் 1-ந் தேதியை சர்வதேச காபி தினமாகக் கொண்டாடி வருகின்றன.

காபியில் உடலுக்குத் தேவையான ஆன்டிஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன. ஒரு நாளில் மூன்று கோப்பை காபி குடிப்பவர்களுக்கு, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாம் இங்கு பார்க்கப்போவது ‘மசாலா காபி’.

அரைப்பதற்கு தேவையானவை:

கிராம்பு – 4

ஏலக்காய் – 2

பட்டை – 1 துண்டு

மிளகு – 4

தேவையானவை:

மேலே குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து அரைத்த பொடி – 2 டீஸ்பூன்

பால் – 3 கப்

தண்ணீர் – 1 கப்

காபி பொடி – 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:

அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

பால், தண்ணீர், அரைத்த பொடி மூன்றையும் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். அதை அடிப்பிடிக்காமல் அவ்வப்போது கலக்கவும்.

காபி கலக்கும் கப்பில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை, தேவையான அளவு காபி பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

அதனுடன் கொதிக்க வைத்த பாலையும் சேர்த்துக் கலக்கினால், ‘மசாலா காபி’ ரெடி.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts