பிந்திய செய்திகள்

வெஜிடபிள் பணியாரம் செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்

இட்லி மாவு – 3 கப்,

நறுக்கிய முட்டைகோஸ்,

கேரட் துருவல் – தலா 1/4 கப்,

நறுக்கிய பச்சைமிளகாய் – 2 டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய காலிஃபிளவர்,

வெங்காயம் – தலா 1/4 கப்,

கொத்தமல்லி,

கறிவேப்பிலை – தேவைக்கு,

தேங்காய்த்துருவல் – 1/2 கப்,

கடுகு,

உளுந்தம்பருப்பு – தலா 1/2 டீஸ்பூன்,

உப்பு,

எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி காய்கறி கலவை, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக வதக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்.

இக்கலவையை இட்லி மாவில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts