Home சமையல் அத்திப்பழ மில்க் ஷேக்

அத்திப்பழ மில்க் ஷேக்

0
அத்திப்பழ மில்க் ஷேக்

நிறைய பேர் அத்திப்பழத்தைப் பார்த்திருப்பீர்கள். அதை எப்படி சாப்பிடுவது என்ற தெரியாமலேயே அதை வாங்கி சாப்பிட மாட்டீர்கள். அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது. அந்த அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட, மில்க் ஷேக் செய்து எடுத்துக் கொள்வது மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக்கை அதிகம் கொடுங்கள். இங்கு அத்திப்பழ மில்க் ஷேக் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்:

அத்திப்பழம் – 10

குளிர்ந்த பால் – 2 கப்

சர்க்கரை அல்லது தேன் – தேவையான அளவு

வென்னிலா ஐஸ் – 1 க்யூப்

செய்முறை:

முதலில் அத்திப் பழத்தை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் அதில் பால் மற்றும் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இறுதியில் அதில் வென்னிலா ஐஸ் சேர்த்து ஒரு முறை அடித்து இறக்கி பரிமாறினால், அத்திப்பழ மில்க் ஷேக் ரெடி!!!

fig benefits: குளிர்காலத்தில் இரவு தூங்கும்முன் ஏன் அத்திப்பழ பால் குடிக்க  வேண்டும் - Samayam Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here