பிந்திய செய்திகள்

கோதுமை மாவு இல்லை என்றால் அரிசி மாவிலும் சுவையான பூரி செய்யலாம்

குழந்தைகள் விருப்பமாக சாப்பிட எனக்கு பூரி வேண்டும் என்று அடம் பிடிக்கும் பொழுது, வீட்டில் கோதுமை மாவு இல்லையென்றால் என்ன செய்வது என்று யோசிப்போம். ஆனால் இதனைக் கூறி குழந்தைகளையும் சமாதானப்படுத்த முடியாது. குழந்தைகள் அடம் பிடித்தார்கள் என்றால் அவர்கள் விரும்பியது கிடைக்கும் வரை சமாதானமாக மாட்டார்கள். எனவே இது போன்ற அவசர நேரத்தில் வீட்டில் இருக்கும் அரிசி மாவை வைத்து இப்படி பூரி செய்யலாம். இதனை செய்வது மிகவும் எளிமையான விஷயம் தான். அரிசி மாவு என்றவுடன் சுவை பற்றி கவலை வேண்டாம். இதன் சுவை அசத்தலாகவே இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – ஒரு கப், எண்ணெய் –கால் லிட்டர், உப்பு – ஒரு ஸ்பூன், சோடா உப்பு – கால் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 4, கல்பாசி – சிறிதளவு, ஏலக்காய் – 1, சோம்பு – ஒரு ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், உருளைக்கிழங்கு – 3, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் அரை ஸ்பூன் உப்பு மற்றும் கால் ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு ஒரு கப் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, சிறிது சூடுபடுத்தி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்த சுடுதண்ணீரை அரிசி மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதனுடன் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து விட்டு, தட்டு போட்டு மூடி, அப்படியே ஊறவிட வேண்டும். பிறகு இந்த பூரியுடன் தொட்டுக்கொள்ள மசாலா செய்திடலாம். இதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெயை ஊற்றவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் சோம்பு, கல்பாசி, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி விட்டு, இதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு மூன்று உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து, இவற்றுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லித்தழையை தூவவேண்டும். பிறகு மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு ஒரு பெரிய பாலித்தீன் கவரை எடுத்துக் கொண்டு அதில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரிசி மாவில் இருந்து பெரிய உருண்டையாக எடுத்து, கவரின் ஒரு பக்கத்தில் வைத்து விட்டு, கவரின் மற்றொரு பக்கத்தை மாவின் மீது வைத்து மூடி கொள்ள வேண்டும். பின்னர் கவரின் மீது பூரி கட்டையை வைத்து தேய்க்க வேண்டும். பிறகு மாவின் மேல் உள்ள கவரை நீக்கிவிட்டு ஒரு கிண்ணத்தை வைத்து அரிசி மாவை வட்ட வடிவில் வெட்டி எடுக்க வேண்டும். பிறகு இந்த மாவை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரிக்க வேண்டும். அவ்வளவுதான் செய்து வைத்துள்ள அரிசி மாவு முழுவதையும் இவ்வாறு பூரி போட்டு எடுக்க வேண்டும். இந்த பூரியை உங்கள் வீட்டில் தவறாமல் செய்து பாருங்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts