பிந்திய செய்திகள்

வெங்காய வடகம்

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 1.5 கப்

பூண்டு பற்கள் – 1/2 கப்

கறிவேப்பிலை – சிறிதளவு

உளுந்து – 1/4 கப் ( 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் )

கடுகு – 1

துவரம்பருப்பு – 1

சீரகம் – 1.5

வெந்தையம் – 1/2

சிவப்பு மிளகாய்ப் பொடி – 1

மஞ்சள் – 1

உப்பு – தேவைக்கு ஏற்ப

ஆமணக்கு எண்ணெய் – 2

சமையல் எண்ணெய் – வறுக்க

செய்முறை :

சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

அதில் கடுகு , வெந்தையம், துவரம்பருப்பு, சீரகம், உப்பு, சிவப்பு மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்குக் கலந்து கொள்ளவும்.

அடுத்ததாக ஊற வைத்த உளுத்தம் பருப்பை மிக்ஸியில் மொர மொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

தற்போது, அதை வெங்காயக் கலவையில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். தற்போது அந்தக் கலவையை எலுமிச்சைப் பழம் அளவிற்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

அவற்றை இரவு முழுவதும் அப்படியே வைத்துவிடுங்கள்.

மறுநாள் அந்த உருளைகளில் சற்று நீர் வற்றி இருக்கும். அவற்றை உடைத்துப் பரப்பி ஆமணக்கு எண்ணெய் தெளித்து பிரட்டுங்கள். தற்போது மீண்டும் அவற்றை உருளைகளாக உருட்டி வையுங்கள்.

இப்படி அதில் நீர் வற்றும் வரை செய்து கொண்டே இருங்கள். இதற்குக் குறைந்தது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் எடுக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts