பிந்திய செய்திகள்

இஞ்சி, கொத்தமல்லி காபி

உடல் களைப்பை போக்க இந்த சுக்கு மல்லி காபி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது போல வேலை முடிந்து வீட்டிற்கு வரும் ஆண்களுக்கு அவர்கள் உடல் களைப்பு சரியாகவும் இந்த ஒரு காபி போதும். சளி, இருமல், தலைவலி போன்ற உடல் அசதியாக அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த காபியை ஒரு டம்ளர் குடித்து பாருங்கள். உங்களை அறியாமலேயே உங்கள் உடல் சுறுசுறுப்பாக மாறிவிடும். உடல் லேசாக மாறுவதை உணர்வீர்கள். அப்படி அனைத்தையும் மறக்கச் செய்யும் இந்த சுக்கு மல்லி காபியை எப்படி செய்ய வேண்டும்

தேவையான பொருட்கள்:

தனியா – 2 ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, ஏலக்காய் – 3, நாட்டுச் சர்க்கரை – 3 ஸ்பூன், பால் – 2 கப்

செய்முறை:

முதலில் சிறிய துண்டு இஞ்சியைத் தோல் சீவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பின்னர் கடாய் நன்றாக காய்ந்ததும், அதில் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை ஒரு தட்டில் சேர்த்து ஆற வைக்க வேண்டும்.

பின்னர் வறுத்து வைத்துள்ள தனியாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு மூன்று ஏலக்காயைத் சிறிய உரலில் வைத்து நன்றாக இடித்து வைக்க வேண்டும். பின்னர் இஞ்சியையும் அதே போல் நன்றாக இடித்துக் வைக்க வேண்டும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் இடித்து வைத்துள்ள இஞ்சி, ஏலக்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள தனியா தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இந்தப் பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து கொதிக்க விட வேண்டும். இது ஏழு நிமிடங்கள் நன்றாக கொதித்த பிறகு, இதனுடன் 3 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு இதனை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதை அப்படியே குடிக்கலாம். இப்போது இதனுடன் 2 கப் பால் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, மீண்டும் ஒரு முறை வடிகட்டி சுடச்சுட பருக கொடுத்து பாருங்கள். உங்கள் உடலில் இருக்கும் அனைத்து பிரச்சனையும் உடனே சரியாகி, உடல் நல்ல சுறுசுறுப்புடன் மாறிவிடும். 10 பேர் செய்யும் வேலை அத்தனையையும் நீங்கள் ஒருவரே செய்யும் பலம் உங்கள் உடலில் வந்து விடும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts