பிந்திய செய்திகள்

இந்த சுவையான இனிப்பு ரெபிசியையும் செய்து பாருங்கள்!!

தேவையானவை;

பச்சரிசி – 1/2 கிலோ,

பனங்கருப்பட்டி -1 கிலோ,

முற்றிய, பெரிய தேங்காய் – 7,

செய்முறை;

பச்சரிசியைக் களைந்து நீரை முற்றுமாக வடித்து மூடி வைக்கவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஊறியிருக்கும் அரிசியை அரைத்துச் சலித்து நைசான மாவாக மூன்று கப் எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய்களை அரைத்து பத்து கப் திக்கான பால் எடுத்துக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீர் கொதிக்கவிட்டு பொடித்த பனங்கருப்பட்டியைப் போட்டுக் கரைத்து வடிகட்டவும்.

தேங்காய்ப் பாலை ஒரு பெரிய வாணலியில் ஊற்றி அத்துடன் அரிசிமாவைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். அடுப்பு மிதமாக எரிய விட்டு கட்டி விழாதபடி கைவிடாமல் கிளற வேண்டும். மாவு கொதிக்க ஆரம்பிக்கும் போது கருப்பட்டி நீரையும் சேர்த்துக் கிளறவும்.

மீண்டும் கைவிடாமல் கிளறி எண்ணெய் பிரிந்து கையில் ஒட்டாத பதத்தில் தொதல் இருக்கும்போது இறக்கி ஒரு ட்ரேயில் கொட்டிப் பரப்பிவிட்டு ஆறியபின் துண்டு போடவும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts