சளி, இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு இப்படிப்பட்ட எல்லாவிதமான பிரச்சினைக்கும் கசாயம் மட்டும்தான் தீர்வு இல்லை. இந்த டீ, உடனடி பலனை கொடுக்கும். இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த டீயை எப்படி போடுவது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கு சளி இருமல் தொந்தரவு இல்லை என்றாலும் கூட, இந்த டீயை குடித்தால் உடல் அசதி தீரும். சளி இருமல் வராமல் தடுக்கும். குளிர்காலத்திற்கு, மழைக்காலத்திற்கு ஏற்ற ஒரு டீ இது. வாங்க இந்த டீ ரெசிபியை பார்த்தார்களாம்.
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள்
அதில் சிறிய துண்டு இஞ்சி,
வரமல்லி – 1 ஸ்பூன்,
மிளகு – 1 ஸ்பூன்,
கிராம்பு – 2,
ஏலக்காய் – 2,
புதினா இலை அல்லது துளசி இலைகள் – 3,
இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய வீட்டில் சிறிய உரல் இருந்தால் அதிலும் கூட, போட்டு இடுத்து எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்தபடியாக டீ போடும் பாத்திரத்தில், 1 கப் அளவு தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள்.
அது நன்றாக கொதித்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பொடி, 2 ஸ்பூன் அளவு டீத்தூள், 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு கொதிக்கவிடுங்கள்.
கப் அளவு தண்ணீரை, 1/2 கப் அளவு தண்ணீராகும் வரை சுண்ட விட வேண்டும். இந்த கசாயத்தை ஒரு சிறிய பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். (கசாயமும் சூடாக இருக்க வேண்டும் பாலும் சூடாக இருக்க வேண்டும்.)
அடுத்தபடியாக காய்ச்சிய 1 1/2 கப் அளவு சூடான பாலை, கசாய தண்ணீரோடு சேர்த்து நன்றாக 2 முறை நுறை வரும் வரை தூக்கி ஆற்ற வேண்டும். (பாலில் தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள்.)
இப்போது சுட சுட மருத்துவ குணங்கள் நிறைந்த டீ தயார்.