பிந்திய செய்திகள்

ஆரஞ்சுத் தோலை தூக்கி வீசுகின்றீர்களா?இனி அப்படி செய்யாமல் இந்த ரெபிசி செய்யுங்கள்

தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோல் – கைப்பிடி அளவு,

இஞ்சி – சிறிய துண்டு,

காய்ந்த மிளகாய் – 1,

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் ஆரஞ்சுதோலை போட்டு நன்கு வதக்கவும்.

அதே வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும்.

வதக்கிய ஆரஞ்சுத் தோல், இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.

இப்போது சூப்பரான ஆரஞ்சுத் தோல் துவையல் ரெடி

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts