பிந்திய செய்திகள்

சைவ, அசைவ உணவாக இருந்தாலும் ருசியை அதிகரிக்க இந்த பொடியை மட்டும் சேர்த்திடுங்கள்!

சமையல் என்ற ஒரு வார்த்தையில் பலவித அர்த்தங்கள் இருக்கிறது. பொதுவாகவே இரண்டு வகையான உணவுகள் மட்டும் தான் சமைக்கப்படுகின்றன. அது சைவம் மற்றும் அசைவம் தான். இதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் காய்கறிகள் மற்றும் சிக்கன், மட்டன், மீன் இவைகள் தான். ஆனால் இவற்றின் மூலம் சமைக்கப்படும் உணவுகள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கிறது.

அதாவது வீடுகளில் சமைக்கும் உணவு தனிப்பட்ட சுவையிலும், கடைகளுக்குச் சென்று சாப்பிடும் பொழுது வேறுவிதமான சுவையிலும், ஹோட்டல்களில் ஒரு விதமான சுவையிலும் இருக்கின்றது. சமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் ஒன்று தான்.

அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் ரகசியம் தான் இந்த சுவைக்கு காரணமாக அமைகிறது. இவ்வாறு உணவுகளின் சுவையை கூட்ட இந்த கரம் மசாலா பொடியை சிறிதளவு சேர்த்தால் போதும். அதை மிகவும் எளிமையாக வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பட்டை – 25கிராம்
பிரியாணி இலை – 5
மராட்டி மொக்கு – 4
ஜாதிபத்திரி – 2
ஸ்டார் பூ – 4
தனியா – 3 ஸ்பூன்
ஏலக்காய் – 2 ஸ்பூன்
கிராம்பு – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்

செய்முறை:

இவ்வாறு மசாலா அரைப்பதற்கு முதலில் இதில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் ஈரத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த மசாலா பொருட்களை மாதக்கணக்கில் நாம் பதப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே இவற்றில் ஈரப்பதம் இருந்தது என்றால் விரைவாகவே இந்த மசாலா பொருட்கள் வீணாகிவிடும்.

எனவே முதலில் கரம் மசாலா பொடியில் சேர்க்கப்படும் அனைத்து மசாலாக்களையும் ஒரு நியூஸ் பேப்பரில் பரப்பி வைத்து, அதனை வெயிலில் வைத்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் காய வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அதில் இருக்கும் ஈரத்தன்மை விரைவாக காய்ந்து விடும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பிறகு கடாயில் ஒவ்வொரு பொருளாக சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஸ்டார் பூ, மராட்டி மொக்கு, கிராம்பு இவை மூன்றையும் சேர்த்து வறுக்க வேண்டும்.

அதன்பின் ஏலக்காய், தனியா, மிளகு இவற்றை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்இவை நன்றாக வறுபட்டதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும் பின்னர் இவற்றுடன் ஜாதிபத்திரி சோம்பு சீரகம் இவை மூன்றையும் சேர்த்து கஷாயம் சூட்டிலேயே லேசாக வறுத்து விட வேண்டும். பின்னர் இவற்றை ஆற வைத்து, ஒரு மிக்ஸி . ஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த பவுடரை 10 நிமிடம் நன்றாக ஆற விட்டு, அதன் பின்னர் ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். பிறகு தேவைப்படும் நேரத்தில் எல்லாம் பொறியல், சிக்கன், மட்டன் போன்ற அனைத்து விதமான உணவுகளை சமைக்கும் பொழுதும் இந்தப் பொடியை அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் பயன்படுத்தினால் போதும். இதன் மூலம் உண்டாகும் வாசனையும், சுவையயும் அனைவரையும் உங்கள் வீட்டிற்கு வரவழைத்து விடும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts