பிந்திய செய்திகள்

இந்த 5உணவுகளை சமைத்த பின் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது.

அவசர அவசரமான இந்த உலகத்தில் காலை சமைத்த உணவுகளை மதியம் சூடுபடுத்தி சாப்பிடுவது என்பது இயல்பான ஒரு விஷயமாகத்தான் உள்ளது. ஆனால் அப்படி சமைத்த பொருட்களை மீண்டும் சூடுபடுத்தும் போது சில உணவுப் பொருட்கள் விஷத் தன்மையாக மாறக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத அந்த உணவுப் பொருட்கள் என்னென்ன. அந்த உணவு பொருட்களை சூடுபடுத்தி சாப்பிட்டால் என்னென்ன விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும், என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

Tip 1:

அதிகமான விலையில் கோழி இறைச்சி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை -  Newsfirst

கோழி இறைச்சியில் அதிக அளவு புரதசத்து சத்து உள்ளது. புரதச்சத்து உள்ள பொருட்களை நாம் இயல்பாக சாப்பிட்டாலே அது செரிமானம் ஆக நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும் அல்லவா. அதனால்தான் புரதசத்து அதிகம் இருக்கும் பொருட்களை இரவில் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள். கோழிக்கறியை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் போது அதில் இருக்கும் புரதச்சத்து இருமடங்காக அதிகரிக்கும். அதுவே பாய்சனாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஒருமுறை ஃபிரை செய்த சிக்கனை மீண்டும் மீண்டும் சூடு செய்யாதீங்க

Tip 2:

கீரையில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். கீரையை ஒருமுறை சமைத்து வைத்தால் அதோடு அவ்வளவு தான். அதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாது. கீரையில் இருக்கக்கூடிய ‘நைட்ரேட்ஸ்’ என்று சொல்லப்படும் சத்தானது சூடு செய்யும் போது ‘நைட்ரைட்டாக’ மாறி புற்றுநோயை விளைவிக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக குடல் புற்றுநோய் உண்டாகக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். கீரையை மீண்டும் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதீங்க.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லுவார்கள். கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் கூட ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்துக்கொள்ளலாம். தினம்தோறும் தொடர்ந்து கீரையை அதிக அளவில் உட்கொள்வதன் மூலம் கூட, சில சமயம் எதிர்மறையாக நம்முடைய உடம்பில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

Tip 3:

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுவது நல்லது...?

முட்டையிலும் புரோட்டீன் சத்து அதிக அளவில் உள்ளது. நன்றாக வேகவைத்த முட்டையை அல்லது வறுத்த முட்டையையும் மீண்டும் சூடுபடுத்தும் போது அது விஷமாக மாறக்கூடும். இதனால் செரிமான பிரச்சனைகள் வயிறு கோளாறுகள் ஏற்பட்டு ஃபுட் பாய்சன் ஆவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. சமைத்த முட்டையை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடவே சாப்பிடாதீங்க.

Tip 4:

காளான் சாப்பிடுவதனால் இத்தனை அற்புத மருத்துவ பயன்கள் உள்ளதா...? - லங்காசிறி  நியூஸ்

அடுத்தபடியாக மஸ்ரூம். காளானை சமைத்தால் சமைத்த உடனேயே சாப்பிட விட வேண்டும். காளானில் புரதச் சத்து அதிகமாக உள்ளது. இதை மீண்டும் மீண்டும் சூடு செய்யும் போது அதுவும் விஷமாக மாறி செரிமான பிரச்சனையை உண்டுபடுத்தி உடல் உபாதைகளை கொடுக்கும்.

Tip 5:

நாடு ரூ. 98; சம்பா ரூ. 99; அரிசிக்கு உச்சபட்ச விலை | தினகரன்

அன்றாடம் நம்முடைய வாழ்வில் அரிசி என்பது அத்தியாவசியமாக சமைக்கக் கூடிய ஒரு பொருள். அதாவது சாதம். சமைத்த சாதத்தை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும்போது அதிலும் நச்சுத்தன்மை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts