பிந்திய செய்திகள்

மிஞ்சிய இட்லியை வீணாக்காதீர்கள்! இப்படி செய்யுங்கள்!

குறிப்பு 1:

ஃப்ரிட்ஜ் இல்லை என்றால் கூட தேங்காயை மூன்று நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்க அதனை ஓட்டிலிருந்து பிரித்தெடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் போட்டு வைத்து விட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீர் மாற்றினால் மூன்று நாட்கள் வரை பத்திரமாக தேங்காயை அப்படியே ஃப்ரெஷ் ஆக வைத்துக் கொள்ளலாம்.

குறிப்பு 2:

வீட்டில் ஊறுகாய் தயார் செய்பவர்கள் அதனை தயார் செய்த பின்பு மீதம் இருக்கும் கடாயில் துருவிய தேங்காய் சேர்த்து தேவையான அளவிற்கு வெள்ளை சாதம் போட்டு, உப்பு சேர்த்து பிரட்டி சாப்பிட்டால் ஊறுகாய் சாதம் அவ்வளவு அருமையாக இருக்கும். வெறும் சாதத்தில் ஊறுகாயுடன் இப்படி செய்து சாப்பிட்டாலும் இன்ஸ்டன்ட் கலவை சாதம் ரெடி!

குறிப்பு 3:

காட்டன் துணிமணிகள் பராமரிப்புக்கு கஞ்சி போட்டு துவைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி கஞ்சி சேர்க்கும் பொழுது ஆங்காங்கே திட்டுத்திட்டாக ஒட்டிக் கொண்டு இருக்கும். இதனை போக்க கஞ்சியுடன் கொஞ்சம் தூள் உப்பு சேர்த்து துவைத்து பாருங்கள் திட்டு திட்டாக ஒட்டாது.

குறிப்பு 4:

பருப்பு இல்லாமல் சோள அடை தயாரிக்க 2 சோளக் கதிரை உதிர்த்துப் போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு, காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்தவற்றுடன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி கொஞ்சம் சேர்த்து அரை கப் கடலை மாவு, அரை கப் அரிசி மாவு ஆகியவற்றை கலந்து அடை பதத்துக்கு மாவு தயாரித்து சோள அடை செய்து பாருங்கள், சுவையான ஆரோக்கியமான அடை நொடியில் ரெடி!

குறிப்பு 5:

எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு அதன் தோலை தூக்கி எறிய வேண்டாம். சிறிய அளவிலான பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள் எப்போதும் பிரஷ்ஷாக இருக்கும். அல்லது அந்த பழத்தின் மூடியை வைத்து கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோ வேவ் ஆகியவற்றை வெளிப்புற பகுதியில் லேசாக அழுத்தம் கொடுத்து தேய்த்து காட்டன் துணியால் துடைத்துப் பாருங்கள்.

குறிப்பு 6: அதிகப்படியான இட்லி சுட்டு வைத்து மீந்து போனால் இட்லியை உதிர்த்து உப்புமா செய்வது போல செய்ய முடியாவிட்டால் ஒரு பாத்திரத்தில் இட்லி மிளகாய் பொடியுடன், தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு கலந்து கொள்ளுங்கள். மீதமான இட்லியை துண்டுகளாக வெட்டி அதில் போட்டு நன்கு பிரட்டி விடுங்கள். இட்லி பொடி எல்லா இடங்களிலும் நன்கு ஒட்டிக் கொள்ளும். அதன் பிறகு ஒரு அடுப்பில் கடாயை வைத்து கடுகு போட்டு தாளித்து இந்த இட்லிகளைப் போட்டு ரெண்டு பிரட்டு பிரட்டி எடுத்தால் ஃப்ரைடு இட்லி ரெடி!

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts