பிந்திய செய்திகள்

மாங்காய் தொக்கு

தேவையான பொருட்கள்:

மாங்காய் – 2,

கடுகு – 2 டீஸ்பூன்

வெந்தயம் – அரை டீஸ்பூன்,

நல்லெண்ணெய் – 100ml,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் – 3 டேபிள்ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

வெல்லத் தூள் – ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்.

மாங்காய் தொக்கு செய்முறை விளக்கம்: முதலில் இரண்டு பெரிய மாங்காய் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மாங்காய் நல்ல புளிப்பு சுவையுள்ள நீட்டு மாங்காயாக இருந்தால் நன்றாக இருக்கும். மாங்காய் உடைய மேல் தோலை சீவி உள்ளே தண்ணீர் இல்லாமல், ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு தேங்காய் துருவும் துருவலில் பெரிய கண் உள்ள பகுதியில் தேய்த்து நன்கு துருவி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வைத்து கொள்ளுங்கள்.

அதில் 50ml அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி காய விடுங்கள். மீதம் இருக்கும் எண்ணெயை இறுதியாக சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் நீங்கள் துருவி வைத்துள்ள மாங்காய் துருவலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். ஐந்து நிமிடத்தில் நன்கு மாங்காய் வெந்துவிடும். அதன் பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும். தூள் உப்பு இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்தால் சரியாக கிடைக்கும்.

மாங்காய் தொக்கு நல்ல காரமாக இருப்பதால் உப்பு தூக்கலாக சேர்த்தால் தான் சரியாக வரும். பிறகு மிளகாய் தூள் 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு சரியாக சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாய்த்தூள் வெறும் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பிறகு மசாலாக்கள் இறங்க நன்கு வதக்கி விட வேண்டும். அடி பிடிக்கும் அளவிற்கு வதக்கி விடக்கூடாது. ஓரளவுக்கு வதங்கிய பின்பு மீதம் இருக்கும் எண்ணெய் சேர்த்து நன்கு வதக்குங்கள். எண்ணெய் பிரிந்து வர நன்கு வதங்கிய பிறகு ஒரு டீஸ்பூன் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

வெல்லம் உப்பு, காரத்தை சரியாக எடுத்துக் கொடுக்கும் எனவே தவிர்த்து விடாதீர்கள். இப்போது வெறும் வாணலியில் ஒரு டீஸ்பூன் கடுகு மற்றும் வெந்தயத்தை கருகி விடாமல் லேசாக சூடு பறக்க வறுத்து பின்பு ஆற வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளுங்கள். பொடித்த இந்த பொடியை மாங்காய் தொக்குடன் தூவி பிரட்டி விடுங்கள். 2 நிமிடம் நன்கு வதக்கிய பிறகு பெருங்காயத் தூள் சேர்த்து லேசாக பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். அவ்வளவுதாங்க மாங்காய் தொக்கு ரொம்பவே சுலபமாக தயாராகி விட்டிருக்கும். இதை 6 மாதம் வரை வைத்திருந்து இட்லி, தோசை, சூடான சாதத்துடன் கூட தொட்டு சாப்பிட்டு விடலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts