பிந்திய செய்திகள்

காய்கறி இல்லாமல் வெங்காயத்தில் மட்டும் சுவையான சாதம்!

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 4,
பச்சை மிளகாய் – 2,
மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்,
உப்பு – அரை ஸ்பூன்,
கடுகு – அரை ஸ்பூன்,
சீரகம் – அரை ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்,
கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்,
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்,
கருவேப்பிலை – ஒரு கொத்து,
எண்ணெய் – 5 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்,
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

செய்முறை:

முதலில் எப்பொழுதும் போல தேவையான அளவு சாதத்தை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நான்கு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பிறகு கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயத்தை மிகவும் குழைவாக வதக்காமல், சற்று வாயில் கடிபடும் அளவிற்கு வதங்கினால் மட்டும் போதும்.

பின்னர் இதனுடன் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

பின்னர் இந்த கலவையுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான வெங்காய சாதம் தயாராகிவிட்டது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts