பிந்திய செய்திகள்

கேழ்வரகு மிக்சர்

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு – 200 கிராம்,

மிளகாய்த் தூள் – சிறிதளவு,

பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பொரித்த அவல் – தலா 50 கிராம்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கேழ்வரகை அரைத்து மாவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த மாவில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, கெட்டிப் பதத்தில் பிசைய வேண்டும்.

மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனுடன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை பொரித்த அவல் சேர்த்தால், சுவையான கேழ்வரகு மிக்சர் ரெடி

மேலும் கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போ ஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கு வலிமையைத் தரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts