பிந்திய செய்திகள்

காய்கறி எதுவும் சேர்க்காமல் வெறும் தக்காளி, வெங்காயத்தை மட்டுமே வைத்து செய்யும் குழம்பு

வீட்டில் இருக்கும் இந்த எளிமையான பொருட்களை வைத்தே சட்டென, மிகவும் ருசியான தக்காளி குழம்பை செய்து விட முடியும். இதனை சுட சுட சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடும் பொழுது நாவில் எச்சில் ஊறும் சுவையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 4, தக்காளி – 6, சோம்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, பூண்டு – ஐந்து பல், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 2 தக்காளி, 2 வெங்காயம் இவற்றை நான்கு துண்டுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு, 5 பல் பூண்டு மற்றும் சிறிய துண்டு இஞ்சி இவை அனைத்தையும் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். 2

பிறகு மீதமிருக்கும் தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக காய்ந்ததும் அதில் 7 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடு ஏறியதும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளியையும் சேர்த்து குழைந்து வேகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்

வற்றுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்னர் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, ஒரு தட்டு போட்டு மூடி, 5 நிமிடத்திற்கு கொதிக்க விடவேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி, கலந்து விட்டு, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts