பிந்திய செய்திகள்

வாயு தொல்லையால் அவதியா? இந்த கஞ்சியை குடிங்க…

வாயு தொல்லை வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் இந்த பூண்டு கஞ்சியை வாரம் இருமுறை குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.

பூண்டு கஞ்சி
தேவையான பொருட்கள்

பச்சரிசி – அரை கப்
பூண்டு – 75 கிராம்
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கு
காய்ச்சிய பால் – 1 கப்

செய்முறை

அரிசியை நன்றாக கழுவி சிறிது நேரம் ஊறவைத்து நீரை வடித்து கொள்ளவும்.

பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை போட்டு தாளித்த பின்னர் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும்.

பூண்டு நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு இறக்க வேண்டும்.

குக்கர் விசில் போனதும் மூடியை திறந்து சாதத்தை நன்றாக மசித்து விட்டு பால் கலந்து பரிமாறவும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts