தேவையானவை:
- நன்கு கனிந்த பட்டர் ஃப்ரூட் (அவகாடோ) – 2
- கெட்டியான பாதாம் மில்க் – அரை கப்
- கோகோ பவுடர் – அரை கப்
- துருவிய டார்க் சாக்லேட் – கால் கப்
- நாட்டுச் சர்க்கரை – அரை கப்
அலங்கரிக்க:
சாக்கோ சிப்ஸ்,
பழத்துண்டுகள்,
வீட்டிலேயே செய்த கோதுமை வேஃபல்,
ஐஸ்க்ரீம் – தேவைக்கேற்ப
செய்முறை:
அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பிளெண்டரில் போட்டு நான்கு நிமிடங்களுக்கு அடிக்கவும்.
குளிரவைத்து, அழகான டம்ளர்களில் ஊற்றி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களில் உங்களுக்கு விருப்பமானவற்றைத் தூவிப் பரிமாறவும்.