பிந்திய செய்திகள்

வாழைப்பழ ரவை தோசை எப்படி செய்வது?

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது.

உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. ரவை, இதய நலத்துக்கும் உதவக்கூடியது. இதயச் செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும்.

ரவையில் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த ஓட்டம் சீராக உதவும். ரத்தச்சோகை வராமல் தடுக்கும்.

சரி இனி வாழைப்பழம், ரவை கொண்டு சுவையான வாழைப்பழ ரவை தோசை செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :.

வாழைப்பழம் – 4

ரவை -2 கப்

கோதுமை – 1 கப்

சீனி – 6 ஸ்பு ன்

உப்பு – 2 சிட்டிகை

நெய் – சிறிதளவு

செய்முறை :.

சுவையான வாழைப்பழ ரவை தோசை செய்வது எப்படி?
வாழைப்பழ ரவை தோசை செய்வதற்கு முதலில் ரவையில் சிறிதளவு தண்னீரை ஊற்றி 15நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பிறகு அதனுள் வாழப்பழத்தை சேர்த்துப் பிசைந்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

பிறகு அதனுள் சீனி, உப்பு, மாவு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து 50 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு தோசைக்கல்லில் மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து, திருப்பி போட்டு, சிறிதளவு நெய் ஊற்றி மொறு மொறுவென்று சுட்டு எடுத்தால் சுவையான வாழைப்பழ ரவை தோசை தயார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts