பிந்திய செய்திகள்

யூடியூப்பை பின்தள்ளுவதற்கு டிக்டாக் அறிமுகம் செய்யும் புதிய அம்சம்

தற்காலத்தில் உலகம் முழுவதும் பிரபல தளமாக யூடியூப் இருந்து வருகிறது. கல்வி, விளையாட்டு, திரைப்படம் என்று அத்தனை பிரிவுகளிலும் ஏராளமான யூடியூப் வீடியோக்கள் காண கிடைக்கின்றன.

அதேபோன்று சிறிய அளவிலான வீடியோக்களை பதிவேற்றுவதில் டிக்டாக் பிரபலமாக இருந்து வருகிறது. டிக்டாக்கின் வளர்ச்சியால் ஃபேஸ்புக் நிறுவனமே தினசரி பயனர்களை இழக்கும் அளவிற்கு அந்நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்நிலையில் யூடியூப்பிற்கும் கடும் போட்டியாக அமையும் வகையில் டிக்டாக் புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. இதன்படி டிக்டாக்கில் பயனர்கள் இனி 10 நிமிடங்கள் வரை வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

டிக்டாக் ஆரம்பத்தில் அறிமுகமானபோது 1 நிமிடத்திற்கு வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வகையில் இருந்தது. அதன்பின் கடந்த ஆண்டு முதல் 3 நிமிடங்களுக்கு வீடியோக்களை பதிவேற்றுவதற்கு அனுமதி அளித்தது. இன்னிலையில் தற்போது 10 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களையும் டிக்டாக்கில் பதிவேற்றலாம் என கூறியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்களின் படைப்பாற்றலை அதிகரிக்கும் வகையில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts