சோனி பிளே ஸ்டேஷன் உலகம் முழுவதும் வீடியோ கேம் பிரியர்கள் பயன்படுத்தும் முன்னணி சாதனமாக இருக்கிறது. இந்த பிளே ஸ்டேஷன் வைத்திருப்பவர்கள் கேம்களை வாங்கி விளையாட வேண்டும்.
இதற்கு பதில் சந்தா மூலம் கேம்களை விளையாட சோனி நிறுவனம் புதிய பிளே ஸ்டேஷன் பிளஸ் சேவையை வரும் ஜூன் முதல் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த சேவை மூன்று திட்டங்களை வழங்குகிறது. பிளே எஸ்டேஷன் பிளஸ் எசன்ஷியல்ஸ் சேவையில் மாதத்திற்கு 2 கேம்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம், சிறப்பு தள்ளுபடிகள், சேவ் செய்யப்பட்ட கேம்களுக்கு கிளவுட் ஸ்டோரேஜ், ஆன்லைன் மல்டிபிளேயர் ஆக்சஸ் ஆகியவை வழங்கப்படும்.
பிளேஸ்டேஷன் பிளஸ் எக்ஸ்டிராவில் 400க்கும் மேற்பட்ட பிஎஸ் 4 மற்றும் பிஎஸ் 5 கேம்கள், பிளேஸ்டேஷன் ஸ்டூடியோஸ் கேட்லாக்கில் உள்ள பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் ஆன கேம்கள், டவுன்லோட் செய்து விளையாடி கொள்ளலாம். இத்துடன் சிறப்பு தள்ளுபடிகள், கிளவுட் ஸ்டோரேஜ், ஆன்லைன் மல்டிபிளேயர் ஆகிய அம்சங்களும் உண்டு.
பிளே ஸ்டேஷன் பிளஸ் பிரீமியம் சேவையில் அனைத்து வகையான பிளே ஸ்டேஷன், பிஎஸ்2, பிஎஸ்பி ஜெனரெஷன் கேம்களுடன் மல்டிபிளேயர் ஆப்ஷன், கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்தியாவில் பிளே ஸ்டேஷன் பிளஸ் எக்ஸ்ட்ரா மாதம் ரூ.800, 4 மாதங்களுக்கு ரூ.2000, வருடத்திற்கு ரூ.5000 என்ற கட்டணத்திலும், பிஎஸ் பிளஸ் பிரீமியம் மாதம் ரூ.1000, வருடத்திற்கு ரூ.6000 என்ற கட்டணத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.