பிந்திய செய்திகள்

ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

பல்வேறு டீசர்களை தொடர்ந்து ஐகூ நிறுவனம் தனது Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இந்திய சந்தையில் ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.

இந்த பிராசஸர் கொண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐகூ நிறுவனத்தின் இரண்டாவது Z சீரிஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் அதிவேகமான ஸ்மார்ட்போன் மாடலாக ஐகூ Z6 ப்ரோ 5ஜி மாடல் இருக்கும் என ஐகூ நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் LPDDR5 ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படலாம். இத்தடன் புதிய ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 66W ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜ் வசதி வழங்கப்பட இருக்கிறது.

முன்னதாக ஐகூ நிறுவனம் அறிமுகம் செய்த ஐகூ Z5 ஸ்மார்ட்போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருந்தது.

தற்போதைய டீசரின் படி ஐகூ Z6 ப்ரோ 5ஜி மாடலில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும்.

இத்துடன் ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD பிளஸ் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், 5000mAh பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts