பிந்திய செய்திகள்

வித்தியாசமான கருணைக்கிழங்கு சட்னி

சட்னி வகைகளில் இந்த கருணை கிழங்கு சட்னி ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கப் போகின்றது. வேக வைத்த கருணைக்கிழங்கு கொண்டு செய்யப்படும் இந்த சட்னி வைத்து கொடுத்தால் எவ்வளவு இட்லி, தோசைகளை வேண்டுமானாலும் நாம் சாப்பிடலாம். அந்த அளவிற்கு ருசி மிகுந்த இந்த கருணைக்கிழங்கு சட்னி எப்படி செய்வது? என்பதைபார்ப்போம்

கருணைக்கிழங்கு சட்னி செய்ய தேவையான பொருட்கள்: வேக வைத்த கருணைக்கிழங்கை – ஒரு கப், சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய தக்காளி – 1, உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன், வர மிளகாய் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, புளி – சிறு கோலிகுண்டு அளவு, இஞ்சி – ஒரு சிறு துண்டு, தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

கருணை கிழங்கு சட்னி செய்முறை விளக்கம்: முதலில் கருணைக் கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கருணை கிழங்கு துண்டுகளை சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடம் வேக வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வெங்காயம், தக்காளி என்று தேவையான எல்லா பொருட்களையும் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள். அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் கழுவி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

மீதமிருக்கும் எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி, வெங்காயம் வதங்கி வந்ததும் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் ஒரு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை சேர்த்துக் கொள்ளுங்கள். இஞ்சித் துண்டை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி வதங்க சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள், சீக்கிரம் வதங்கும். பிறகு இதனுடன் வேக வைத்து எடுத்து வைத்துள்ள கருணைக்கிழங்கு சேர்க்க வேண்டும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை அல்லது புதினா தழை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள்.

இந்த பொருட்களெல்லாம் நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பிறகு மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். தாளிக்க ஒரு கரண்டியை வைத்துக் கொள்ள தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சட்னியில் கொட்டி பரிமாறினால் சுடச்சுட இட்லி, தோசை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம், அவ்வளவு ருசியாக இருக்கும்,

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts