பிந்திய செய்திகள்

தேங்காய் பிஸ்கெட்

தேவையான பொருட்கள் :

மைதா மாவு – 1 1/4 கப்

சர்க்கரை – 3/4 கப்

வெண்ணெய் – 100 கிராம்

பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் – 1/2 கப்

செய்முறை :

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து 2-3 முறை சலித்து கொள்ளவும்.

அவன் ப்ரூஃப் தட்டில் அலுமினியம் ஃபாயில் விரித்து, அதில் தேங்காய் துருவலை வைக்கவும்.

Oven-ஐ 300F ப்ரீஹீட் செய்து தேங்காய்த்துருவல் தட்டை வைத்து 10-15 நிமிடங்கள் (நல்ல பொன்னிறமானால் போதும், பத்து நிமிடங்களுக்குப் பின் அவ்வப்பொழுது பார்த்து கவனமாக எடுக்கவும்.

தே.துருவல் சீக்கிரம் கருகிவிடும், ஜாக்கிரதை! bake செய்யவும்.

வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து எலக்ட்ரிக் பீட்டர் அல்லது விஸ்க்-ஆல் சில நிமிடங்கள் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

வெண்ணெய், சர்க்கரை கலவை கிரீமியாக வரும்வரை நன்றாக கலக்கவேண்டும். கிட்டத்தட்ட உளுந்துமாவு போல fluffy-ஆக ஆகும்வரை கலக்கவும்.

பிறகு அதனுடன் சலித்துவைத்த மாவு, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து விரல்களால் மிருதுவாக கலந்துவிடவும்.

தேங்காய்த் துருவலையும் மாவுக்கலவையுடன் சேர்த்துப் பிசிறி விடவும்.

இப்பொழுது மாவு கிட்டத்தட்ட புட்டுமாவு போல, உருட்டினால் உருண்டை சேரும், உதிரி, உதிரியாகவும் இருக்கும்

பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பர் விரித்துக் கொண்டு, மாவுக் கலவையை விருப்பமான வடிவில் பிடித்து வைக்கவும்.

உங்க வசதிக்கேற்ப உருண்டையாகவோ, சதுரமாகவோ, கன சதுரமாகவோ செய்துக்கலாம்.

எல்லா பிஸ்கட்டுகளையும் செய்து அடுக்கிய பிறகு பேக்கிங் ட்ரேயை 15 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்கவும்.

Oven-ஐ 350F ப்ரீஹீட் செய்து கொள்ளவும்.

பிஸ்கட் ட்ரேயை oven-ல் வைத்து 15 நிமிடங்கள் bake செய்யவும்.

பிஸ்கட்டுகள் வெந்து இப்படி நிறம் மாறி இருக்கும். oven-ல் இருந்து எடுத்து நன்றாக ஆறவைக்கவும்.

சுவையான தேங்காய் பிஸ்கெட் தயார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts