Home தொழினுட்பம் வாட்ஸ்அப் செயலியில் இப்படியொரு வசதியா?

வாட்ஸ்அப் செயலியில் இப்படியொரு வசதியா?

0
வாட்ஸ்அப் செயலியில் இப்படியொரு வசதியா?

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் க்ரூப்களில் இருந்து வெளியேறுவதில் மாற்றம் செய்யப்படுகிறது. புது மாற்றத்தின் படி பயனர்கள் க்ரூப்களில் இருந்து வெளியேறும் போது ஒருவர் க்ரூப்-இல் இருந்து வெளியேறி இருக்கிறார் என யாருக்கும் நோட்டிபிகேஷன் செல்லாது. இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அனைவருக்குான ஸ்டேபில் அப்டேட்டில் இந்த அம்சம் வழங்கப்படும் போது, தேவையற்ற க்ரூப்களில் இருந்து பயனர்கள் எவ்வித தயக்கமும் இன்றி வெளியேறி விட முடியும். புது அப்டேட் பற்றிய தகவலை வாட்ஸ்அப் சார்ந்த விவரங்களை மட்டும் வெளியிடும் தனியார் வலைதளம் ஒன்று தெரிவித்து உள்ளது. இதே தகவலை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி ஒருவர் வாட்ஸ்அப் க்ரூப்-இல் இருந்து வெளியேறும் பட்சத்தில் அந்த நபர் மட்டுமின்றி சம்மந்தப்பட்ட க்ரூப் அட்மினுக்கு மட்டுமே அதற்கான நோட்டிபிகேஷன் செல்லும். இதன் படி ஒருவர் க்ரூப்-இல் இருந்து வெளியேறி இருப்பது க்ரூப்-இல் உள்ள மற்றவர்களால் பார்க்க முடியாது.

தற்போதைய வெர்ஷனில் யாரேனும் க்ரூப்-இல் இருந்து வெளியேறினால் அனைவருக்கும் அதுபற்றிய நோட்டிபிகேஷன் தெரியும் வகையில் ஆட்டோ ஜெனரேட் செய்யப்பட்ட நோட்டிபிகேஷன் முறை வழங்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here