பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (03-02-2022)

மேஷ ராசி

அன்பர்களே, தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்களால் சில மனசங்கடங்கள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புது நபர்களை அதிகம் நம்பி ஏமாற வேண்டாம். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

மிதுன ராசி

அன்பர்களே, குடும்ப நிதி நிலைமை சீரடையும். அனாவசிய செலவுகளை குறைத்துகொள்ளவும். பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி

அன்பர்களே, வாழ்க்கை தரத்தை உயர்த்த வழி கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் வலிய வந்துப் பேசுவர். சொத்து விவகாரத்தில் வில்லங்கம் இருக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். பெற்றோர்களின் அறிவுரை கிடைக்கும். நண்பர்கள் சிலர் எதிராக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு

கன்னி ராசி

அன்பர்களே, புதிய முயற்சிகளில் ஆர்வம் கூடும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்

துலாம் ராசி

அன்பர்களே, வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

தனுசு ராசி

அன்பர்களே, பிரியமானவர்களின் திடீர் சந்திப்பு நிகழும். நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உற்சாகம் தரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் சாதகமான நிலை உருவாகும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்பத்தில் காரிய அனுகூலம் உண்டாகும். பழைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் செயல் வேகம் கூடும்.

கும்ப ராசி

அன்பர்களே, மன வலிமை கூடும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். உறவினர்களிடம் ஏற்பட்ட மன கசப்பு நீங்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் மன அமைதி ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். வாழ்க்கைத்துணை வழியில் நற்செய்தி வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts