பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(04-02-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனதில் போட்ட திட்டம் நிறைவேறும். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

ரிஷப ராசி

அன்பர்களே, யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பெரியோர்களின் அனுசரணை கிடைக்கும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இருந்த குழப்பம் நிலை நீங்கும். உறவினர்கள் இல்லம் நாடி வருவர். கணவன் மனைவிக்கிடையே அன்பான சூழல் நிலவும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

கடக ராசி

அன்பர்களே, எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பயணங்கள் அலைச்சலை தரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்பத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். திருமண முயற்சிகள் பலிதமாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி

அன்பர்களே, உங்கள் திறமைக்குத் தகுந்த வெகுமதி கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். நட்பு வட்டாரங்கள் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

துலாம் ராசி

அன்பர்களே, பெற்றோர் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். பண வரவில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்பத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்யவும். வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்பத்தில் அனுசரித்து போவது நல்லது. மனதில் உயர்வான எண்ணங்கள் வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மீன ராசி

நேயர்களே, புத்தி சாதூர்யத்தால் எதையும் சாதிக்க முடியும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts