பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(05-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொளவர். பண விவகாரத்தில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் முக்கிய விசேஷங்கள் நடக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, வாக்கு சாதுரியத்தால் எதிலும் ஜெயிக்க முடியும். பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் சலசலப்பு நிலவும். உறவினர்களுடன் உறவு மேம்படும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம் ராசி

நேயர்களே, மற்றவர்கள் பாராட்டும்படி உங்கள் செயல்கள் இருக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட நேரிடும். அடுத்தவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வரவுக்கு மீறிய செலவுகள் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு ராசி

நேயர்களே, உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்ளவர். முன் கோபத்தைக் குறைக்கவும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்திற்கு இருந்த எதிர்ப்புகள் அடங்கும். சமூக அந்தஸ்து உயரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளவும்.

கும்ப ராசி

நேயர்களே, பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசவும். தியானத்தால் மன நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மீன ராசி

நேயர்களே, குடும்ப பிரச்னையை தீர்க்க முடியும். தெய்வ வழிபாடு சிறக்கும். கணவன் மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts