பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (06-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வேண்டிய பொருள் சேர்க்கை உண்டாகும். குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தரவும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்தது தானாகவே நடக்கும். பொருளாதார நெருக்கடி குறையும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி

நேயர்களே, உறவினர்களிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். நவீன பொருட்களை கவனமாக கையாளவும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சிம்ம ராசி

அன்பர்களே, புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, வார்த்தைகளை எப்போதும் அளந்து பேசவும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். முக்கிய பயணங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப பாரம் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடிக்க முடியும். உடல் சோர்வு நீங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு ராசி

நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் எற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகர ராசி

அன்பர்களே, குடும்பத்தினருடன் விவாதம் செய்ய வேண்டாம். எதிரிகளின் பலம் பாதியாக குறையும். வாகன பயணங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் சகஜ நிலை திரும்பும்.

கும்ப ராசி

அன்பர்களே, மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். நண்பர்களிடம் இருந்த மன கசப்பு மாறும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்ப பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts