பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(07-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்ய முடியும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். எதிரிகள் ஒதுங்கி நிற்பர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

ரிஷப ராசி

அன்பர்களே, பிரியமானவர்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். வெளியில் யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். உறவினர்களிடம் மனக்கசப்பு வரும். திட்டமிட்ட வேலைகள் எவ்வித தடைகளின்றி முடியும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்ப விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். இழுபறியில் இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்ப பொருளாதார நிலை உயரும். அடுத்தவர்களை குறை கூறுவதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்பத்தில் திடீர் செலவுகள் வரும். மன உளைச்சல் நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

துலாம் ராசி

அன்பர்களே, உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு உணர முடியும். பிரியமானவர்கள் வழியில் நன்மை உண்டு. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். நட்பால் நன்மை வந்து சேரும். சேமிக்கும் வேண்டும் எண்ணம் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

தனுசு ராசி

அன்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரும். உறவினர்களின் வருகை அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்ப ராசி

அன்பர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மீன ராசி

அன்பர்களே, அன்றாட செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். திருமணம் காரியம் கைகூடி வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts