பிந்திய செய்திகள்

இந்த வார ராசி பலன் 07-02-2022 முதல் 13-02-2022 வரை

மேஷ ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் இருந்த எண்ணங்களும், திட்டங்களும் செயல்வடிவம் பெரும். இது நாள் வரை இருந்த பண பிரச்சனைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். எதிர்பாராத செலவுகள் வரும். மனதில் பல புதிய எண்ணங்கள் தோன்றும். கணவன் மனைவி இடையே மனம்விட்டு பேசுவது நன்மைதரும். பிரியமானவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பற்றி கவலை ஏதும் பட தேவையில்லை. குடும்ப விஷயங்களை யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லது. உத்யோக மாற்றம் ஏற்படும். புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிப்படவும்

ரிஷப ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை அமைத்துக்கொள்ள முடியும். பேச்சு திறமையால் அனைத்தையும் சாதிக்க முடியும். குடும்பத்தில் வரவிற்கு மீறிய செலவுகள் வரும். பண வரவு சிறிது தாமதமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் நன்மையையும் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் அன்பு பாசம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்சனைகள் பெரியளவில் பாதிக்காது. மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் உண்டாகும். உத்யோகத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பாக பயணங்கள் ஏற்படும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்

மிதுன ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, சில முக்கிய தருணங்களில் மற்றவர்களிடம் அனுசரித்து போவது நல்லது. அனாவசிய பேச்சால் தேவையில்லாத பிரச்சனைகள் வரலாம், ஆகையால் பேச்சில் பொறுமை அவசியம். உடல் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். தடைபட்ட காரியங்கள் இனிதே நடைபெறும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். உங்கள் முக்கிய தேவைகள் அவ்வப்போது நிறைவேறும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம் : மஹாலக்ஷ்மியை வழிப்படவும்

கடக ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, நல்லதும் கேட்டதும் கலந்தே நடக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பான முறையில் செய்ய முடியும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுய ரூபம் புரியவரும். பிரியமானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தர முடியும். கடன் பிரச்சனையில் சிக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வரும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : குலதெய்வத்தை வணங்கவும்

சிம்ம ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் பற்றி கவலைபடாமல் உங்கள் காரியங்களை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். வரவேண்டிய பணம் எந்த தடையும் இன்றி வரும். உறவினர்களால் சில சுப விரயங்கள் ஏற்படும். எதிர்பாராமல் வரும் செலவுகளை திறமையாக எதிர்கொள்ள முடியும். தூரத்து உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனையில் இழுபறி நீடிக்கும். பெற்றோர் றுதுணையாக இருப்பர். வாகன யோகம் அமையும். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்

கன்னி ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, பெரிய மனிதர்களின் ஆதரவும் அவர்கள் மூலம் சில உதவிகளும் கிடைக்கும். நீங்கள் செய்ய விரும்பும் புதிய முயற்சிகள் மூலம் வெற்றிகள் தேடி வரும். பழைய வாகனத்தை மாற்றியவுடன், புதிய வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற முடியும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாழ்க்கைதுணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீட்டில் ஏதோ ஒரு வகையில் மருத்துவ செலவுகள் வரும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : பைரவரை வழிப்படவும்

துலாம் ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் எதிர்பார்த்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பர். எதிலும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படவும், அதனால் பல நன்மைகள் உண்டாகும். உடல் நலம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளவும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொது பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. சுப விரயங்களால் எதிர்பார்த்ததை விட அதிகம் செலவுகள் ஏற்படும். சோம்பேறித்தனத்தை தவிர்ப்பதன் மூலம் நிறைய நன்மைகளை அடையலாம். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்

விருச்சிக ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, மற்றவர்களால் செய்ய முடியாத காரியத்தை தைரியமாக எடுத்து செய்ய முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும். வீடு கட்டுவது தொடர்பாக தற்சமயம் முயற்சிகள் எடுக்கலாம். உறவினர்கள் வழியில் இருந்த மனக்கசப்பு தீரும். எதிர்பாராத பொருள் விரயம் ஏற்படும். புது கடன் எதுவும் இப்போதைக்கு வாங்க வேண்டாம். பெற்றோர்களின் உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் வரும் சண்டை சச்சரவுகளை பேசி சரிசெய்து கொள்ளவும். விரோதமாக இருந்த சிலர் மனம் மாறி ஆதரவாக செயல்படுவர். உத்யோகத்தில் பணிசுமை கூடும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்

தனுசு ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், பிறரை நம்பாமல் உங்களை மட்டுமே நம்பி காரியத்தில் இறங்குவது நல்லது. அதிகப்படியான உடல் உழைப்பு காரணமாக உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. குடும்ப விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவும். எதிர்பாராத நன்மைகள் நண்பர்களின் மூலம் கிடைக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். குல தெய்வ கோயிலுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். சில நேரங்களில் அவசரகதியில் மேற்கொள்ளும் முடிவுகளால் பிரச்சனைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும்.
பரிகாரம் : குரு பகவானை வழிபடவும்

மகர ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, கையில் எடுத்த காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும். குடும்ப அடிப்படை வாழ்க்கை வசதி, சௌகரியங்கள் எதற்கும் குறைவில்லை. நட்பு வட்டாரம் விரிவடையும். வரவும் செலவும் சமமாக இருக்கும். திட்டமிடாத பயணங்கள் அதிகம் உண்டு. பண வரவுகள் அதிக அலைச்சலுக்கு பிறகே வந்து சேரும். கணவன் மனைவி விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். பழைய சொத்துக்கள் விற்று புதிய மனை வாங்க கூடும். மனதில் எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உண்டாகும். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
பரிகாரம் : விநாயகரை வழிபடவும்

கும்ப ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாளைய கனவு ஒன்று நனவாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். பிரியமானவர்கள் வழியில் எதிர்பாராத தனலாபங்கள், ஆதாயங்கள் உண்டாகும். பயணிகளின் போது உடைமைகளை கவனமாக பார்த்துகொள்ளவும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திர சாமிகளை வழிபடவும்

மீன ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் விரைவில் கைகூடும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். அன்றாட வசதி வாய்ப்புகள் பெறுக தொடங்கும். பேச்சிலும் செயலிலும் அதிக கவனம் செலுத்தவும். உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். கணவன் மனைவியிடையை அன்யோன்யம் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு அவசியம். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். எதிர்பாலினத்தவருடன் பழகும்போது கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
பரிகாரம் : . நவகிரகத்தை தினமும் சுற்றி வரவும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts