பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(08-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி

நேயர்களே, இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையை தரும். கேட்ட இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த இன்னல்கள் குறையும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கடக ராசி

நேயர்களே, பல வேலைகளை ஒரே நேரத்தில் பார்க்க வேண்டிவரும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். கணவன் மனைவிக்குள் சில கசப்பான விஷயங்கள் நடக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

சிம்ம ராசி

நேயர்களே, நீண்ட நாள் சிக்கலுக்கு தீர்வு வரும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கன்னி ராசி

நேயர்களே, தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். உடல் நலம் சீராகும். நண்பர்களிடம் எப்போதும் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவு வந்துப் போகும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். நண்பர்கள் சிலர் விரோதமாக செயல்படுவர். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

விருச்சிக ராசி

நேயர்களே, சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும்.

தனுசு ராசி

நேயர்களே, புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். உறவினர்கள் வழியில் மனசங்கடங்கள் வரும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் புகழ் கிடைக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்ப நிதி நிலைமை சீராகும். முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். ஒதுங்கி நின்றவர்கள் விரும்பி வருவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி

நேயர்களே, எதிரிகள் அடிபணிந்து போவர். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். எப்போதும் இல்லாத மனம் சந்தோஷம் ஏற்படும். உறவினர்கள் உதவி கரம் நீட்டுவர். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts